பணக்காரர்கள் எண்ணிக்கையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது இந்தியா!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை 97ஆக உயர்ந்து, பல வருடமாக டாப் 3 இடத்தில் இருந்த ரஷ்யாவை, இந்தியா இந்த வருடம் 4ஆம் இடத்திற்கு தள்ளியுள்ளதாக ஹூரன் குளோபல் ரிச் லீஸ்ட் 2015 அறிக்கை தெரிவித்துள்ளது.

 

உலகத்தில் இருக்கும் பாதி பில்லியனர்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் தான் உள்ளனர் என இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா பில்லியனர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் முறையாக டாப் 3 இடத்திற்குள் நுழைகிறது எனவும் தெரிவித்துருந்தது.

97 பல்லியனர்கள்

97 பல்லியனர்கள்

இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 27 பில்லியனரகள் உருவாகியுள்ளர். இதன் மூலம் இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 266 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

முதல் இடம்

முதல் இடம்

வழக்கம் போல் இந்த வருடமும் முகேஷ் அம்பானி 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மேலும் உலகளவில் இவர் 41வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யாவின் பொருளாதார நிலை மற்றும் அரசியல் நிலையில் சற்று மந்தமாக இருப்பதால் 2014ஆம் ஆண்டில் இந்நாட்டின் வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவின் பில்லியன் எண்ணிக்கை அதிகரிக்காமல் 93ஆக உள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 365 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடதக்கது.

ஹூரன் குளோபல் ரிச் லீஸ்ட் 2015
 

ஹூரன் குளோபல் ரிச் லீஸ்ட் 2015

இந்த அறிக்கையில் 68 நாடுகளின் 2,089 பில்லயனர்கள் பற்றிய தகவல்களை தொகுத்துள்ளனர். 649பேரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது, 869 பேரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது, 230 பேர் சொத்து மதிப்பில் மாற்றம் இல்லை, 341 புது முகங்கள் மேலும் 95 பேர் இந்த வரிசையில் இருந்து வெளியேறினார்கள்.

டாப் 3

டாப் 3

மேலும் இப்பட்டியலில் டாப் 3 பில்லியனர்களாக பில் கேட்ஸ், கார்லோஸ் ஸ்லிம், வாரன் பாபெட் ஆகியோர் உள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 244 பில்லியன் டாலர்.

சீனா

சீனா

சீனாவின் பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மாவின் இடத்தை எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் கிங் லீ ஹெஜுன் பிடித்துள்ளார். இதன் மூலம் ஜாக் மா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

பேஸ்புக்

பேஸ்புக்

சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் இந்த வரும இப்பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India replaces Russia as Number 3 on Hurun Rich List

India has scaled 27 places to replace Russia and is now Number 3 in the Hurun Global Rich List 2015, a ranking of the dollar billionaires across the world.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X