இது தான் மோடியின் "பட்ஜெட் டீம்"!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறது. 2014-15ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தயாரித்து பிப்ரவரி 28ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

ஆனால் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த பல திட்டங்கங்களை தீட்டவும், வடிவமைக்கவும், சீர்திருத்தம் செய்யவும் பட்ஜெட் அறிக்கையை பிரதமர் மோடியின் வளர்ச்சி பாதையை ஒத்து அமைக்க நிதியமைச்சர் தலைமையில், மோடி கண்காணிப்பில் அமைய உள்ளது. இரண்டாவது பட்ஜெட் சிறப்பாக தயாரிக்க மோடி தனி "டீம்" ஒன்றை அமைத்துள்ளார். இதில் யார் யாரெலாம் இருக்கிறார்கள் என்று ஒரு ரவுண்டு பார்போமா...

பெரும் தலைவலி
 

பெரும் தலைவலி

இந்த முறை பட்ஜெட் தயாரிப்பதில் பொருளாதார வல்லுனர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கு போகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான வளர்ச்சி இலக்கு மற்றும் திட்ட குழு இல்லாமையும் தான். சரி இந்த சூப்பர் பட்ஜெட்டை உருவாகும் மாஸ்ட் மைன்ட்ஸ் யார் என்பதை தொடர்ந்து பார்போம்...

அரவிந்த் சுப்பிரமணியன்

அரவிந்த் சுப்பிரமணியன்

சமீபத்தில் இந்திய நிதி அமைச்சகத்திற்குள் நுழைந்த தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் இக்குழுவில் முக்கிய பங்கு வகுக்கிறார். இவர் அமெரிக்காவின் பீட்டர்சன் பொருளாதார நிறுவனத்தின் முக்கிய பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர்.

சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ்

வரி வதிப்பு மற்றும் வசூல், சுவிஸ் நாட்டுகளில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய சக்திகாந்த தாஸ், மோடியின் பட்ஜெட் குழுவின் முதுகெழும்பாக கருதப்படுகிறார்.

ரத்தன் பி. வாட்டல்

ரத்தன் பி. வாட்டல்

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பணியாளர்களை பலரையும் இடம் மாற்றம் செய்த மத்திய அரசு ரத்தன் பி. வாட்டல் அவர்களை மட்டும் தன்னகத்தே வைத்துக்கொண்டது. அவர் 0மத்திய சொலவீனத்துறையின் செயலாளர் ஆவார். புதிய பட்ஜெட்டில் செலவீன மேலான்மையில் இருக்கு முக்கிய பங்கு உண்டு.

ஆராதனா ஜோரி
 

ஆராதனா ஜோரி

மத்திய அரசின் கோல் இந்திய பங்கு விற்பனையில் முக்கிய பங்காற்றிய அவர் மத்திய அரசிற்கு இதன் மூலம் 22,500 கோடி நிதிக்கிடைத்துள்ளது. மேலும் இவர் மத்திய அரசின் மூலதன குறைப்பு துறையின் செயலாளர் ஆவார். அடுத்த கட்டமாக மத்திய அரசின் ஒப்புதல் படி இவர் ஒஎன்ஜிசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை குறைக்க திட்டமிட்டுள்ளார். இவருக்கு மத்திய அரசிற்கு நிதி திரட்டும் வேலைகளில் முக்கிய பங்கு உண்டு.

ராஜிவ் மெஹ்ரிஷி

ராஜிவ் மெஹ்ரிஷி

அவர் நிதித்துறையின் செயலாளர் மட்டும் அல்லாமல் மத்திய பொருளாதார விவகார துறையின் செயலாளர் ஆவார். மேலும் மத்திய அரசின் அதிகாரிகள் மாற்றத்தில் பொருளாதார விவகார துறையில் இவருக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. இவரின் திட்டவடிவம் நாட்டின் உயர்ந்த வளரச்சி இலக்கை அடையே உதவும் என அவராலும் நம்பப்படுகிறது.

ஹஷ்முக்த் ஆதியா

ஹஷ்முக்த் ஆதியா

இந்திய வங்கித்துறையில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்கிய ஹஷ்முக்த் ஆதியா பிரதமரின் பட்ஜெட் குழுவில் இடம் பெற்றுள்ளார். இவர் குஜராத் மாநிலத்தின் நிதியமைச்சகத்தின் இணை செயலாளர் பதவியிலும் உள்ளார்.

அனிதா கபூர்

அனிதா கபூர்

மேலும் தேசிய நேரடி வரி வாரியத்தின் தலைவர் அனிதா கபூர் இக்குழுவில் முக்கிய இடம் வகுக்கிறார். மேலும் நடப்பு நிதியாண்டின் வரி வசூல் அளவை எட்டும் நிலையில் மத்திய அரசு உள்ளது இதற்கான முழு திட்ட வடிவத்தில் இவருக்கு அதிமுக்கிய பங்கு உண்டு.

கவ்ஷல் ஸ்ரீவஸ்தவ்

கவ்ஷல் ஸ்ரீவஸ்தவ்

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியை அமலாக்கம் செய்வதில் முக்கிய பங்குவகிக்கும் மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவாரன கவ்ஷல் ஸ்ரீவஸ்தவ் இக்குழுவில் இடம் பெறுள்ளார்.

ராஜத் பார்கவா

ராஜத் பார்கவா

மத்திய பட்ஜெட் துறையின் துணை செயலாளர் 2014-15ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டின் மொத்த திட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கும் கண்காணிப்பாளராக உள்ளார்.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

இப்புதிய குழுவின் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி, துணை தலைவர் அரவிந்த் பானாகாரிய, அதேபோல் இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் விவசாய துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆகியோர் அடக்கம்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Meet Modi's Core 'Budget' Team of Top Officials

India has scaled 27 places to replace Russia and is now Number 3 in the Hurun Global Rich List 2015, a ranking of the dollar billionaires across the world.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more