மும்பை: மத்திய அரசு பிபிஎஃப் திட்டத்தின் குறைந்தபட்ச வைப்பு காலத்தை, 15 வருடத்தில் இருந்து 20 வருடங்களாக அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் கிடைத்துள்ளது, மேலும் இதுக்குறித்த அறிவிப்புகள் மத்திய பட்ஜெட் வெளியீட்டில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்பவர் 7 வருடத்தில் முதலீடு செய்ய பணத்தில் ஒரு பகுதியையும், 15 வருடங்களுக்கு பின் முழு பணத்தையும் எடுத்து கொள்ள முடியும்.
இக்கால அளவை 15 வருடத்தில் இருந்து 20 வருடமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
அதிக வட்டி
மேலும் இத்திட்டம் சேமிப்பை மையமாக கொண்டவர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். 20 வருட திட்டத்தை அறிவிக்கும் மத்திய அரசு அதிகப்படியான வட்டி அளிக்கும் என்பது மிக உறுதி. மேலும் இந்த முதலீட்டு திட்டம் 80சி திட்டத்தின் கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அதிகப்படியான முதலீடு கிடைக்கப்பெறும் என மத்திய அரசு நம்புகிறது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் 1கோடி ரூபாய் மற்றும் 1கோடி ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் வைப்பாளர்களுக்கு வித்தியாசமான வட்டி விகிதத்தை வங்கிகள் அளித்து வருகிறது. மேலும் 1கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதியை வைுப்பு காலம் முடியும் முன்னரே எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது.
முதிர்வு காலம்
இனி ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதியை, முதிர்வு காலம் முடிந்த பின்னரே முறித்துக்கொள்ள வேண்டும் என்றும், தொகைக்கு ஏற்ப கூடுதல் வட்டி விகிதமும் அளிக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கட்டுமானத்துறை
மேலும் இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடு இந்திய கட்டுமான துறையின் வளரச்சிக்கும் மிகவும் சாதகமாக அமையும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு நிறுவனங்கள்
மும்பையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிதியமைச்சர், இந்திய கட்டுமான துறையில் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பதாகவும், இவற்றை அனைத்தையும் கவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
வரி வசூல்
மேலும் வரி வசூல் இலக்கை அடைய தகாத வழிமுறையை மத்திய அரசு கையாழுவதில்லை என்றும், கடந்த ஒரு வருடத்தில் வரி குறைப்பு மற்றும் செலவீன அதிகரிப்பு ஆகியவற்றை குறிப்பிட்டார் அருண் ஜேட்லி.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications