14 வருடத்தில் தமிழ்நாட்டில் 15.80 பில்லயன் டாலர் அன்னிய முதலீடு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், அன்னிய முதலீடு குறித்து வெளியிட்ட அறிக்கையில் கடந்த 14 வருடத்தில் இந்திய சந்தையில் செய்யப்பட்ட அன்னிய முதலீட்டில் அதிகம் பெற்ற மாநில பட்டியலில் தமிழ்நாடு முன்றாம் இடத்தில் உள்ளது.

2000-2014ஆம் ஆண்டுகளில் இந்தியா சந்தையில் மொத்தம் 236.46 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மகாராஷ்டிரா மற்றும் NCR பகுதிகள் மொத்த முதலீட்டில் சுமார் 49 சதவீதம் கவர்ந்ததுள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலம் இக்காலகட்டத்தில் 70.40 பில்லியன் டாலர் ஆதாவது 30 சதவீத முதலீட்டை கைபற்றியுள்ளது. இதை தொடர்ந்து NCR பகுதி 45.77 பில்லியன் டாலர் கவர்ந்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது மொத்த முதலீட்டில் 19 சதவீதமாகும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

மகாராஷ்டிரா மற்றும் NCR பகுதிகளை தொடர்ந்து தமிழ்நாடு 15.80 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டை கவர்ந்து முன்றாம் இடத்தில் உள்ளது.

பிற மாநிலங்கள்

பிற மாநிலங்கள்

தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடக(14.17 பில்லியன் டாலர்), குஜராத் (10.18 பில்லியன் டாலர்), ஆந்திரா பிரதேசம் (9.72 பில்லயன் டாலர்) மற்றும் மேற்கு வங்காளம் (2.88 பில்லியன் டாலர்) அளவில் கவர்ந்துள்ளது.

அன்னிய நாடுகள்

அன்னிய நாடுகள்

இந்திய சந்தையில் அதிகம் முதலீடு செய்த நாடுகள் என்ற வகையில் பார்க்கும் போது மொரிஷியஸ் 83.73 பில்லியன் டாலர், சிங்கப்பூர் 29.19 பில்லியன் டாலர், பிரட்டன் 21.76 பில்லியன் டாலர், ஜப்பான் 17.55 பில்லியன் டாலர், அமெரிக்கா 13.38 பில்லியன் டாலர் என்ற அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய துறைகள்

முக்கிய துறைகள்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு காப்பீடு, பாதுகாப்புத் துறை, கட்டுமானம், மற்றும் மருத்துவ உபகரன உற்பத்தி ஆகிய துறையில் அன்னிய முதலீட்டு அளவை தளர்த்துள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maharashtra, NCR attract 49 per cent of total FDI in India

Maharashtra and the National Capital Region (NCR) have cornered 49 per cent of the total foreign direct investment inflows into the country since April 2000, according to Commerce and Industry Ministry data. 
Story first published: Monday, February 9, 2015, 17:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X