இந்திய சாப்ட்வேர் துறைக்கு இது பொன்னான காலம்.. சொல்றது யார் தெரியுமா??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலக நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று, இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தின் தூணாக விளங்கும் ஐடித் துறை 2015ஆம் நிதியாண்டில் மிகப்பெரிய வளர்ச்சியை அடையப்போவதாக நாஸ்காம் அமைப்பு தெரிவித்துள்ளது.

 

மேலும் அடுத்த நிதியாண்டில் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு, மென்பொருள் ஏற்றுமதியில் இதுவரை காணாத வளர்ச்சியை அடைய உள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கும், இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கும் அதிக அளவிலான வருவாய் கிடைக்கும் என மென்பொருள் துறை அமைப்புகளில் மிக முக்கிய அமைப்பாக கருதப்படும் நாஸ்காம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இத்துறையில் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளதாக நாஸ்காம் அறிவித்துள்ளது.

நாஸ்காம்

நாஸ்காம்

நாஸ்காம் அமைப்பின் கணிப்பின் படி 2015ஆம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு மென்பொருள் ஏற்றுமதி 12 சதவீத்தில் இருந்து 14 சதவீதம் வரை உயரும் எனவும், இதன் மூலம் இத்துறையில் வர்த்தகம் அளவும் 112 பில்லியன் டாலரை எட்டும் என தெரிவித்துள்ளது.

12% வளர்ச்சி

12% வளர்ச்சி

நடப்பு நிதியாண்டில் மென்பொருள் ஏற்றுமதியில் 12 சதவீத உயர்வு கண்டுள்ளதாகவும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் துறை

டிஜிட்டல் துறை

மேலும் கடந்த 2 வருடங்களாக டிஜிட்டல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாட்டின் மென்பொருள் துறையை பல பரிமானங்களில் வளர்த்துள்ளது. மேலும் இந்தியா நிறுவனங்களின் திறன் வெளிநாடுகளுக்கு அதிகளவில் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது நாஸ்காம்.

புதிய துறைகள்
 

புதிய துறைகள்

இந்த வளர்ச்சிக்கு முக்கியமாக காரணமாக இந்தியா நிறுவனங்கள் கிளவுட், அனல்டிக்ஸ் மற்றும் பிக் டேட்டா அகிய துறைகளில் கவனம் செலுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

மேலும் அமெரிக்காவின் வலிமையான வளர்ச்சி விகிதம் இந்தியாவிற்கு இத்துறையில் அதிகப்படியான ஆடர்கள் கிடைக்க வழிவகை செய்யும், மேலும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பணசுருக்க நிலை மற்றும் மோசாமான பொருளாதாரம் இந்தியாவிற்கு பெரும் இழப்பை அளித்துள்ளது.

சாப்ட்வேர் துறை வருவாய்

சாப்ட்வேர் துறை வருவாய்

மேலும் உலகிலேயே மென்பொருள் துறையில் அதிக வருவாய் பெற்றிடும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் மொத்த ஜிடிபியில் மென்பொருள் துறையின் வருவாய் 8 சதவீதமாகும்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Software Exports to Grow Faster Next Fiscal Year

Nasscom, said india's software exports would rise as much as 14% to $112 billion in the year starting April, more than the 12% growth projected this year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X