டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பு 11 பைசா சரிவு!!
மும்பை: இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா சரிந்து 62.30 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் வலிமையான பொருளாதார நிலையில் பிற நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் வலிமை பெற்று வருகிறது இதன் மூலம் ரூபாய் மதிப்பு கடந்த இரண்டு நாட்களாக சரிந்த வண்ணமே உள்ளது.

இதுக்குறித்து நாணய பரிமாற்ற நிறுவனங்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக டாலர் மதிப்பு உயர்வால் பிற நாணய மதிப்புகள் சரிவை கண்டு வருகிறது. மேலும் நாட்டில் டாலர் இருப்பு குறைந்து வருவதாகவும் இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா குறைந்து ஒரு மாத சரிவைான 62.19 ரூபாயை எட்டியது.


Click it and Unblock the Notifications