டெல்லி: இந்தியாவின் மலிவு விலை விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் வரையிலான 3வது காலாண்டில் சுமார் 275 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் 172 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருந்தது.
இந்நிறுவனத்தின் தணிக்கை செய்யப்படாத நிதி அறிக்கையை ஸ்பைஸ்ஜெட் நிர்வாக குழு ஆய்வு செய்து வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
வருவாய் சரிவு
இக்காலகட்டத்தில் இந்நிறுவனம் எரிவாயு விநியோக பிரச்சனை, நிலுவை தொகை, நிர்வாக மாற்றம் போன்ற பல பிரச்சனைகள் சந்தித்துள்ளது. இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வருவாய் அளவு 27 சதவீதம் சரிந்துள்ளதாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பயணிகள் எண்ணிக்கை
மேலும் கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இக்காலகட்டத்தில் ஸ்பெஸ்ஜெட் நிறுவனத்தில் பயணிகள் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்துள்ளது, விலை நிலையும் 20 சதவீதம் குறைந்துள்ளது.
செலவீனம்
இக்காலகட்டத்தில் இந்நிறுவனம் ரீடெலிவரி கட்டணமாக 172.25 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது, குத்தகை முடிந்த மூன்று விமானங்களுக்கு 70.87 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது.
20 கோடி ரூபாய் லாபம்
இதுக்குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான கிரன் கோடிஸ்வரன் கூறுகையில் ஒன்-ஆப் மற்றும் பிற கட்டணங்கள் இல்லாமல் இருந்திருந்தால் டிசம்பர் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 20 கோடி ரூபாய் அளவில் நிறுவனம் லாபம் பெற்றிருக்கும் என தெரிவித்தார்.
599 ரூபாயில் விமான பயணம்
பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2 சதவீதம் சரிந்து 19.65 ரூபாயாக விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications