டெல்லி: 2015ஆம் ஆண்டின் ஜனவரி மாத்ததில் உற்பத்தி பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெயின் விலை அதிகளவில் குறைந்தால் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் -0.39 சதவீதமாக குறைந்ததுள்ளது. ஆயினும் இக்காலகட்டத்தில் உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
மேலும் நாட்டில் மொத்த விலை பணவீக்கம் டிசம்பர் மாத்தில் 0.11 சதவீதமாகவும், நவம்பர் மாதத்தில் -0.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
உணவு பொருட்களின் பணவீக்கம்
ஜனவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் குறைந்தாலும் உணவு பொருட்களின் பணவீக்கும் 6 மாத உயர்வை எட்டி 8 சதவீதமாக உள்ளது.
ஜனவரி மாதம்
டிசம்பர் மாத்தை ஒப்பிடுகையில் ஜனவரி மாத்தில் பருப்பு வகைகள், காய்கறி, மற்றும் தானியங்களின் பணவீக்கும் அதிகரித்திருந்தது. ஆனால் உருளை,பால், அரிசி, முட்டை, மீன் மற்றும் மாமிசம் ஆகியவற்றின் விலை உயர்வு மிதமாக இருந்தது.
எண்ணெய் மற்றும் எரிவாயு துறை
கச்சா எண்ணெய் விலை சரிவால் இத்துறையின் பணவீக்கம் -10.69 சதவீதமாக உள்ளது. மேலும் உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் 1.05 சதவீதமாக உள்ளது.
சில்லறை பணவீக்கம்
ஜனவரி மாத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 5.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் பாதுகாப்பான பொருளாதார நிலைக்கு 2016ஆம் ஆண்டுக்குள் சில்லறை பணவீக்கத்தை 6 சதவீதமாத கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
வட்டி உயர்வு
ராஜன் அறிவித்த வட்டிக் குறைப்பால் நாட்டில் நிலவும் பணவீக்கத்தின் அளவுகள் தெரிவில்லை என கடந்த மாதம் அறிவித்த இருமாத மறுஆய்வு கொள்கையில் வட்டி வகிதத்தில் எந்த விதமான மாற்றும் செய்யவில்லை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications