போலி நிறுவனங்களின் மூலம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு!! நிதியமைச்சகம்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் பணியில் மத்திய அரசு மிகவும் தீவரமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்த ஆய்வில், செயல்படாத நிறுவனங்கள் அல்லது போலியான நிறுவனங்களின் மூலம் 250 கோடி ரூபாய் அளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளதை நிதி அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

 

இத்தகைய செயல்படாத நிறுவனங்களின் மூலம் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகள் கோடிக்கணக்கான கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியுள்ளனர் என மத்திய பொருளாதார புலனாய்வு செயலகம் (CEIB) தெரிவித்துள்ளது.

கமிஷன்

கமிஷன்

அதுக்குறித்த விசாரணையில் இத்தகைய நிறுவனங்கள் கமிஷன் பணத்திற்காக பெரு நிறுவனங்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக மற்ற ஒரு பாதுகாப்பு பெட்டகமாக செயல்படுகிறது என CEIB தெரிவித்துள்ளது. இதுவரை இத்தகைய நிறுவனங்கள் 249 கோடி ரூபாய் அளவு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

செயல்முறை

செயல்முறை

பெரு நிறுவனங்கள் தங்களது கருப்பு பணத்தை போலி நிறுவனங்களில் முதலீடு செய்துவிட்டு, பின்பு அதே பணத்தை வங்கியின் வழியாக காசோலையின் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக மற்றியுள்ளனர்.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

இதுகுறித்து பொருளாதார புலனாய்வு கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இத்தகைய முறையை தடுக்கவும், வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தை கைபற்றும் வழிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

வரி ஏய்ப்பு
 

வரி ஏய்ப்பு

நாட்டின் வரி வருவாயை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் அதன் வழிகளையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance minister detects Rs 250cr tax evasion through entry operators

The telecom industry lined up for a new round of spectrum auctions slated for next month even as some of them have approached various courts with some "clarifications and queries" regarding the sale.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X