உணவு மானியத்தை நேரடியாக வழங்குவதால் அரசுக்கு ரூ.25,000 கோடி லாபம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உணவு மானியத்தில் நேரடி பரிமாற்ற (DBT) திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மத்திய அரசு 25,000 கோடி ரூபாய் சேமிக்க இயலும். கொள்முதல், விநியோகம் மற்றும் சேமிப்பு சார்ந்த செலவுகளை தவிர்ப்பதால் இந்த சேமிப்பு ஏற்படுகின்றன என்று கிரீஸில் நிறுவனம் கூறியது.

 

அரசாங்கம் பணத்தை சேமிப்பதைக் காட்டிலும், DBTயை செயல்படுத்துவதினால், உணவிற்கு பதிலாக பயனாளியின் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் நிகழும், இது பொருளாதார நுகர்வை அதிகரிக்கும் என்று கிரீஸில் அராய்ச்சி கூறுகிறது.

உணவு மானியத்தை நேரடியாக வழங்குவதால் அரசுக்கு ரூ.25,000 கோடி லாபம்!!

2015-16 விலைப் படி 5 நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 5,800 ரூபாய் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்படும். இது கிரீஸிலின் கூற்றுப்படி, கிராமப்புற குடும்பங்களின் வருடாந்திர செலவுகளை (உணவு+உணவு அல்லாதது) விட 5சதவிகிதம் உயர்வாகும்.

"இத்தகைய நிபந்தனையற்ற பண பரிமாற்றம் குடும்பங்களில் விருப்புரிமை செலவுகளை அதிகரிக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை, இதனால் நாட்டின் நுகர்வு கண்டிப்பாக அதிகரிக்கும் " என்று கிரீஸில் கூறுகிறது.

அதிக வருமானம் கொண்ட குடும்பங்கள், தங்களது பணத்தினை புரதம் நிறைந்த உணவுகளான பால், முட்டை, மீன் மற்றும் மாமிசம் மற்றும் உடை மற்றும் காலணிகளில் பயண்படுத்துகின்றனர்.

சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளல் மற்றும் உடல்நலம், கல்வியிக்கு அதிகம் செலவிடுவதன் மூலம் சமூக நலத்தை உயர்த்த DBT நீண்ட காலம் செயல்படும் , இந்த திட்டம் "பரீட்டோ முன்னேற்றம்" திட்டத்தைப் போன்றந்தாகும், ஒருவரையும் பாதிக்காது, ஒருவருக்கேனும் பயனளிக்கும்.

இந்த திட்டத்தின் "உண்மையான வெற்றி" மற்றும் நுகர்வு முறையின் தாக்கம் தகுதியான பயனாளிகள் மற்றும் செயல்படுத்தும் வேகத்தை பொறுத்தே அமையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Direct transfer for food subsidy can help govt save Rs 25,000 crore, Crisil says

Implementing direct benefit transfer (DBT) for food subsidy will help government save Rs 25,000 crore by eliminating costs associated with procurement, distribution and storage of foodgrains, ratings agency Crisil said.
Story first published: Thursday, February 19, 2015, 17:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X