ஆடம்பர ஆடை நிறுவனத்தை கைப்பற்றியது ஸ்னாப்டீல்!! சபாஷ் சரியான போட்டி பிளிப்கார்ட்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான ஸ்னாப்டீல் தனது ஆடை விற்பனையை அதிகரிக்கவும், நிறுவனத்தின் விற்பனை பிரிவுகளை விரிவாக்கவும், பிளிப்கார்ட் நிறுவனத்துடன் போட்டி போடவும், ஆடம்பர் ஆடை விற்பனை நிறுவனமான எக்ஸ்குளூசிவ்லி.இன் நிறுவனத்தை குறிப்பிடப்படாத தொகைக்கு கைபற்றியுள்ளது.

இதன் முலம் இந்நிறுவனத்தின் பேஷன் பிரிவின் விற்பனை 1 பில்லியனை எட்ட உள்ளது. அதுமட்டும் அல்லாமல் 2014ஆம் நிதியாண்டின் முடிவிற்குள் இந்நிறுவனத்தின் வர்த்தகம் 2 பில்லியன் டாலர் அளவை எட்டும் என ஸ்னாப்டீல் தெரிவித்துள்ளது.

60 சதவீத வர்த்தகம்

60 சதவீத வர்த்தகம்

இந்நிறுவனத்தின் 2 பில்லியன் டாலர் வர்த்தகத்தில் 60 சதவீத வருமானம் பேஷன் பிரிவில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. இப்பிரிவை விரிவாக்க ஸ்னாப்டீல் நிறுவனம் இந்த எக்ஸ்குளூசிவ்லி.இன் நிறுவனத்தை கைபற்றியுள்ளது.

ஆடம்பர் பொருட்கள்

ஆடம்பர் பொருட்கள்

இந்தியாவில் ஆடம்பர் பொருட்களின் சந்தை மதிப்பு 14 பில்லியன் டாலராகும், 30 சதவீதம் ஆண்டு வளர்ச்சியில் ஆடம்பர சந்தை வளர்ந்து வருகிறது. மேலும் 70 சதவீத மக்கள் ஆடம்பர் பொருட்களை வாங்க வருப்பம் தெரிவிக்கின்றனர் என சந்தை ஆய்வு நிறுவனமான KPMG-ASSOCHAM அறிக்கை தெரிவித்துள்ளது.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

எக்ஸ்குளூசிவ்லி.இன் நிறுவனத்தை கைபற்றியதை குறித்து ஸ்னாப்டீல் கூறுகையில், "இந்நிறுவனத்தின் கைபற்றியதன் மூலம் பேஷன் பிரிவில் அதிகப்படியான விற்பனை செய்ய முடியும், மேலும் அடுத்த ஆண்டில் இப்பிரிவில் மட்டும் 2 பில்லியன் டாலர் இலக்குடன் நிறுவனம் செயல்பட உள்ளது." என ஸ்னாப்டீல் நிறுவனம் தெரிவித்தது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

கடந்த மே மாதம் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் சகபோட்டியாளரான பிளிப்கார்ட் நிறுவனம் 2,000 கோடி ரூபாய்க்கு ஆடை விற்பனை நிறுவனமான மின்திரா நிறுவனத்தை கைபற்றியது, இதன் வெளிப்பாடே எக்ஸ்குளூசிவ்லி.இன்.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

இந்தியாவில் ஆடம்பர பொருட்களை வாங்கும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களுக்கான பிரத்தியேகமாக ஸ்னாப்டீல் நிறுவனம் ஆடம்பர் ஆடை வடிவமைப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தை கைபற்றியுள்ளது என ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைவர் குனால் பஹல் தெரிவித்தார்.

இலக்கு

இலக்கு

மேலும் இந்நிறுவனம் 2015ஆம் ஆண்டுக்குள் ஆடம்பர பொருட்களின் விற்பனையில் 100 மில்லயின் டாலர் வர்த்தகத்தை எட்டவும், அடுத்த 3 வருடத்தில் 1 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்டவும் இந்நிறுவனம் தனது இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

நிதி திரட்டல்

நிதி திரட்டல்

ஸ்னாப்டீல் நிறுவனம் ஜப்பான் சாப்ட்பாங்க், ரத்தன் டாடா உட்பட பல நிறுவனங்களின் மூலம் இதுவரை 1.5 பில்லியன் டாலர் வரை நிதி திரட்டியுள்ளது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Snapdeal buys Exclusively, expands presence in luxury segment

Expanding its presence in the high-end fashion segment, online marketplace Snapdeal has acquired luxury fashion portal Exclusively.com for an undisclosed amount.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X