சூறாவளி வளர்ச்சியில் "டிசிஎஸ்" நிறுவனம்!! பிராண்டு மதிப்பு 8.7 பில்லியன் டாலராக உயர்வு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம், பணியாளர்கள் வெளியேற்றம் மற்றும் மறுசீரமைப்பு திட்டங்கள் என பல பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டாலும், கடந்த 5 வருடத்தில் உலகளவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது.

 

லண்டனை சேர்ந்த பிராண்டு மதிப்பீடு நிறுவனமான பிராண்டு பைனான்ஸ் நிறுவனம் உலக நிறுவனங்களின் பிராண்டு மதிப்பிட்டை ஆய்வு செய்து வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்ளில் டிசிஎஸ் முன்னணிலை வகிப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ்

டிசிஎஸ்

2010-2015ஆம் ஆண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு 2.3 பில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 8.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்திற்கு பிராண்டு பைனான்ஸ் நிறுவனம் AA+ தரத்தையும் அளித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் உலகளவில் 4 முக்கிய மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மதிப்பீடு

மதிப்பீடு

பிராண்டு பைனான்ஸ் நிறுவனம் ஒரு நிறுவனத்தின் நன்மதிப்பு, நிறுவனத்தின் சொத்து மதிப்பு, நிதியியல் நிலை ஆகியவற்றை ஆராய்ந்து பின்னரே தரத்தை அறிவிக்கும்.

டிவிட்டர்
 

டிவிட்டர்

இதுக்குறித்து பிராண்டு பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டேவிட் ஹெய்க் கூறுகையில், "2015ஆம் ஆண்டில் பிற துறை நிறுவனங்களை விட ஐடித்துறை நிறுவனங்கள் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது, இதில் டிவிட்டர் நிறுவனத்தின் மதிப்பு 3 மடங்கு உயர்ந்து 4.4 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல் டிசிஎஸ் நிறுவனம் 271 சதவீதம் உயர்வந்து 8.7 பில்லியன் டாலராக உள்ளது" என தெரிவித்தார்.

பல துறை முதலீடு

பல துறை முதலீடு

இந்நிறுவனம் தனது முதலீட்டை பல துறைகளில் விரிவாக்கம் செய்துள்ளது இதன் மூலம் இந்நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு குறைந்த காலகட்டத்தில் அதிகளவில் வளர்ந்துள்ளது. மேலும் 2014ஆம் ஆண்டில் 50க்கும் மேற்பட்ட வருதுகளை இந்நிறுவனம் வாங்கியுள்ளது.

பணியாளர்கள் வெளியேற்றம்

பணியாளர்கள் வெளியேற்றம்

இந்நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேற்ற நடவடிக்கைகளை டிசிஎஸ் நிர்வாகம் குறைத்துள்ளதாகவும், இவை மேலும் தொடரப்போவதில்லை எனவும் டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்தள்ளது. ஆனால் பணியாளர்கள் மத்தியில் இன்னமும் இதற்கான பதட்டம் நிலவுவதாகவும் தெரிவித்தனர்.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.87 சதவீதம் குறைந்து 2657.40 புள்ளிகளாக குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS fastest growing IT brand for last 5 yrs: Brand Finance

Tata Consultancy Services, the country’s largest provider of information technology, has been recognised as the fastest-growing brand globally in this sector over five years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X