பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் கடந்த வாரம் வெற்றிகரமாக பனாயா என்னும் அமெரிக்க நிறுவனத்தை 200 மில்லியன் டாலர் ஆதாவது 1,200 கோடி ரூபாய்க்கு கைபற்றியது.
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனம், மேலும் 12 நிறுவனங்களுக்கும் மேலான நிறுவனங்களை கைபற்றும் திட்டத்துடன் மிகவும் திவரமாக உள்ளது.
வருவாய் முக்கியமில்லை
இதுக்குறித்து விஷால் சிக்கா கூறுகையில், புதிய நிறுவனங்களை கைபற்றுவதன் நோக்கம் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க இல்லை, இன்போசிஸ் நிறுவனத்தில் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையை மேம்படுத்தவது மட்டும் முக்கிய நோக்கம் என தெரிவித்தார்.
டஜன் நிறுவனங்கள்
மேலும் அவர் அடுத்த சில வருடங்களில் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த டஜன் ஆதாவது 12க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கையகப்படுத்தும் நோக்குடன் உள்ளதாக விஷால் சிக்கா தெரிவித்தார்.
நிதி ஒதுக்கிடு
இன்போசிஸ் நிறுவனம் புதிதாக கைபற்றம் நிறுவனங்களில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யவும், நிறுவனங்களை கைபற்ற 5 பில்லியன் டாலர் நிதியை இன்போசிஸ் நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
லோடுஸ்டோன்
2012ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் மேனேஜ்மென்ட் கன்சல்டிங் நிறுவனமான லோடுஸ்டோன் நிறுவனத்தை 390 மில்லியன் டாலருக்கு கைபற்றியது. இதன் பிறகு தற்போது தான் 200 மில்லியன் டாலருக்கு பனாயா நிறுவனத்தை கைபற்றியது.
பிளான் 3.0
விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக பதவியேற்றிய பிறகு வருவாயை மையமாக வைத்துக்கொண்டு பிளான் 3.0 என்ற திட்டத்தை தீட்டினார். இதை சில காரணங்களுக்காக ஒதுக்கிவிட்டார். பின்பு இன்போசிஸ் நிறுவனம் புதிய துறையில் இறங்கும் என அவர் தெரிவித்தார்.
ஆட்சேர்ப்பு
மேலும் இவர் பதவியேற்றிய பின்பு பல நிறுவனங்களில் இருந்து முக்கிய பணியாளர்களை இன்போசிஸ் நிறுவனத்தில் தேடிதேடி இணைத்துக்கொண்டார். இதில் தான் பணியாற்றிய முன்னாள் நிறுவனமான எஸ்ஏபி (SAP) நிறுவனத்தில் இருந்து அப்துல் ரசாக் , மைக்கேல் ரே மற்றும் ரித்திகா சூரி ஆகியோர் அடங்குவர்.
உயர் பதவி
சிக்காவில் இணைக்கப்பட்ட பணியாளர்களை அனைவரும் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் பதவிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
வருவாய் இலக்கு
மேலும் 2015ஆம் ஆண்டில் இன்போசிஸ் பணியாளர்கள் ஒவ்வொருவரிடம் இருந்து வருடத்திற்கு 1,00,000 டாலர் வரை வருமான ஈட்ட விஷால் சிக்கா இலக்கை நிர்ணயம் செய்துள்ளார். தற்போது இதன் அளவு 52,000 டாலராக உள்ளது குறிப்பிடதக்கது.
பிக் டேட்டா
மேலும் அடுத்த தலைமுறை டெக்னாலஜி என போற்றப்படும் பிக்டேட்டா துறையில் இன்போசிஸ் தற்போது 76 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதன் அளவை அடுத்து இரண்டு வருடத்திற்குள் 1,000 ஆக உயர்த்த இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications