பெங்களுரூ: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம், 2012ஆம் ஆண்டுக்குப்பின் நிறுவனத்தின் புதிய சிஇஓவான விஷால் சிக்கா தலைமையில் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் பனாயா என்னும் அமெரிக்கா நிறுவனத்தை கைபற்றி சில நாட்களே ஆன நிலையில், அடுத்த நிறுவனத்தை கைபற்ற திட்டமிட்டு வருகிறது.
தற்போது இன்போசிஸ் நிறுவனம் காற்றின் தரத்தை கண்டறியும் உபகரனத்தை (air quality detectors) உருவாக்கும் ஒரு துவக்க நிறுவனத்தை கையகப்படுதும் முயற்சியில் இறங்கியுள்ளது.
விஷால் சிக்கா
காற்றின் தரத்தை கண்டறியும் உபகரனத்தை தயாரிக்கும் ஒரு சிறு நிறுவனத்தில் இன்போசிஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதை கடைகளில், அடுக்கு மாடி கட்டிடங்கள், மருத்துவமனை மற்றும் சுரங்கம் போன்றவற்றில் பயன்படுத்த முடியும். மேலும் இதனை கிளவுட் மூலம் இணைத்து தகவல்களை உடனுக்குடன் பெறலாம் என இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் விஷால் சிக்கா தெரிவித்தார்.
பெயர் வெளியிடவில்லை
இந்நிறுவனத்தின் பற்றி அனைத்தையும் தெரிவித்தாலும் நிறுவனத்தின் பெயரை மட்டும் விஷால் சிக்கா தெரிவிக்க வில்லை.
இண்டர்நெட் ஆஃப் திங்ஸ்
இந்த பெயர் தெரியாத நிறுவனம் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்னும் புதிய துறையில் முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தாக். இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்பது கம்பியூடிங் மற்றும் நான்-கம்பியூடிங் உபகரணங்கள் மத்தியில் இணைப்பை உண்டாக்கி, தகவல்களை பெறுதல். இதனைக் கொண்டு புதுமையான வர்த்தக உலகம் வருவாகி வருகிறது.
ஏப்ரல் மாதம்
இந்த நிறுவனத்தை கையப்படுத்தும் பணி வருகிற ஏப்ரல் மாதத்தில் முழுமையாக முடிவடையும் என இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
12 நிறுவனங்கள்
விஷால் சிக்கா திட்டத்தின் படி அடுத்த 5 வருடங்களில் 12க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கைபற்றுவது தான்.
நிதி ஒதுக்கிடு
இன்போசிஸ் நிறுவனம் புதிதாக கைபற்றம் நிறுவனங்களில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யவும், நிறுவனங்களை கைபற்ற 5 பில்லியன் டாலர் நிதியை இன்போசிஸ் நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
பிக் டேட்டா
மேலும் அடுத்த தலைமுறை டெக்னாலஜி என போற்றப்படும் பிக்டேட்டா துறையில் இன்போசிஸ் தற்போது 76 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதன் அளவை அடுத்து இரண்டு வருடத்திற்குள் 1,000 ஆக உயர்த்த இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications