H-1B விசா வைத்துள்ளவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அமெரிக்க அரசு, செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் H-1B விசா வைத்துள்ளவர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை கோர விரும்பினால் அவர்களின் கணவன்/ மனைவிமார்கள் H-4 விசா வைத்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அமெரிக்காவில் வேலை செய்வதற்கான உரிமம் ஆதாவது work permit வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இத்திட்டம் வருகிற மே 26ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

இதன் மூலம் திறமையுள்ள மற்றும் பட்டம்பெற்ற பல இலட்ச இந்திய மக்கள் பயன்பெறுவார்கள் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

சட்டம்

சட்டம்

தற்போதுள்ள சட்டத்தின் படி H-1B விசா வைத்துள்ளவர்களின் கணவன் மற்றும் மனைவிமார்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதி இல்லை. இதனால் பட்டம் பெற்ற பலர் திருமணம் ஆன பின்பு அவர்கள் வீட்டிலேயே முடிங்கி கிடக்கும் நிலை ஏற்படும். இனி இந்த நிலை முற்றிலும் மாற்றப்பட உள்ளது.

விசா விண்ணப்பம்

விசா விண்ணப்பம்

மே 26ஆம் தேதி முதல் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை மையத்தில் (USCIS) H-1B விசா வைத்துள்ளவர்களின் கணவன் மற்றும் மனைவிமார்கள் வேலை செய்வதற்கான உரிமத்தை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஒப்புதல்

ஒப்புதல்

விண்ணப்பம் செய்யும் கணவன் மற்றும் மனைவிமார்களின் ‘Form I-765' மற்றும் H-4 dependent spouse ஒப்புதல் பெற்றவுடன் அவர்களுக்கு அமெரிக்காவில் வேலை செய்வதற்கான உரிமம் வழங்கப்படும்.

விண்ணப்பம் எண்ணிக்கை

விண்ணப்பம் எண்ணிக்கை

மேலும் முதல் வருடத்தில் 179,600 விண்ணப்பங்களையும், அடுத்த வருடத்தில் 55,000 விண்ணப்பங்களை தகுதிகாண் தேர்வு செய்து ஒப்புதல் அளிக்க உள்ளது.

நிரந்தர குடியுரிமை

நிரந்தர குடியுரிமை

H-1B விசா வைத்துள்ள அமெரிக்காவில் குடியுரிமை பெறாதவர்களின் கணவன் மற்றும் மனைவிமார்கள் தங்களது வேலையைக் கொண்டு நிரந்தர குடியுரிமை பெறுவதில் சில தளர்வுகளை அளிக்க அமெரிக்காவின் Department of Homeland Security முடிவு செய்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கிங்பிஷர்-ஸ்பைஸ்ஜெட்

கிங்பிஷர்-ஸ்பைஸ்ஜெட்

கிங்பிஷர் நிறுவனத்தை பார்த்து பாடம் கற்றோம்!! ஸ்பைஸ்ஜெட்கிங்பிஷர் நிறுவனத்தை பார்த்து பாடம் கற்றோம்!! ஸ்பைஸ்ஜெட்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Soon, US work permits for spouses of H-1B visa holders

The US on Tuesday announced that it will provide work permits to spouses of H-1B visa holders beginning May 26, a move that is expected to benefit thousands of talented and professional Indian spouses who come to America but are unable to work.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X