கிங்பிஷர் நிறுவனத்தை பார்த்து பாடம் கற்றோம்!! ஸ்பைஸ்ஜெட்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய நிறுவனரான அஜய் சிங் புதன்கிழமை நடந்த கூட்டத்தில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வளர்ச்சி பாதை தடைப்படாமல் இருக்க நிர்வாகம் முதலில் சேவை வரி நிலுவை மற்றும் பணியாளர்களின் சம்பள நிலுவைகளை தீர்க்க முடிவு செய்துள்ளது என தெரிவித்தார். கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் நிலை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு ஒருபோதும் நடக்க விடமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

 

நிலுவை தொகை

நிலுவை தொகை

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த சில மாதங்களில் அதிகப்படியான சலுகை கட்டணங்களாஸ் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது, இந்த வளர்ச்சி தடைப்படாமல் இருக்க நிர்வாகம் செய்ய உள்ள முக்கிய பணிகளில் பணியாளர்களின் சம்பள நிலுவையை தீர்ப்பது தலையாய பணியாக கருதுகிறது.

கிங்பிஷர் நிறுவனம்

கிங்பிஷர் நிறுவனம்

7,000 கோடி ரூபாய் கடன் தொகையில் சிக்கித் தவித்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணியாளர்கள் சம்பள நிலுவை, விமான குத்தகையின் நிலுவை தொகை போன்ற பல பிரச்சனையின் காரணமாக இந்நிறுவனம் முற்றிலும் முடங்கியது.

பணியாளர்கள் தவிப்பு

பணியாளர்கள் தவிப்பு

கிங்பிஷர் நிறுவனம் முடங்கியதால் இந்நிறுவனத்தின் பணியாளர்கள் சம்பள நிலை மற்றும் பணி இழப்பு ஆகியவற்றால் தவித்தனர். இதுமட்டும் அல்லாமல் சில பைலட்-கள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தனர். வழக்கில் வெற்றியும் பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

தற்போதைய நிலை
 

தற்போதைய நிலை

கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் இந்நிறுவன சொத்துக்களை கடன் அளித்த நிறுவனக்கள் கைபற்றியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிர்வாக மாற்றம்

ஸ்பைஸ்ஜெட் நிர்வாக மாற்றம்

சில மாதங்களுக்கு முன்பு சன் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைவரான கலாநிதிமாறன் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிதிநெக்கடியை சமாளிக்க முடியாமல், இந்நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான அஜய் சிங்கிற்கு நிறுவன பொறுப்புகளை கைமாற்றப்படட்து.

58.46 சதவீத பங்ககுள்

58.46 சதவீத பங்ககுள்

இந்நிலையில் செவ்வாய்கிழமை மாலையில் கலாநிதிமாறன் கட்டுப்பாட்டில் இருந்த 58.46 சதவீத பங்குகளை அஜய் சிங் கைக்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்த கலாநிதி மாறன் நிறுவனத்தில் 82 கோடி ரூபாய் முதலீடு செய்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை கைபற்ற உள்ளார்.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இன்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உயர்வை எட்டி 25.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பணியாளர்களுக்கு நிறுவன பங்குகள்

பணியாளர்களுக்கு நிறுவன பங்குகள்

மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது பணியாளர்கள் நிறுவனத்தில் நிலைத்திருக்க முக்கிய பணியாளர்களுக்கு நிறுவன பங்குகளை அளிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அஜய் சிங் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet's Ajay Singh: Clearing statutory dues, salaries were first priority

Ajay Singh, the new promoter of SpiceJet, said on Wednesday that he has decided to pay off the airline’s statutory dues like Service Tax and employees’ salaries as he wanted to show that a Kingfisher like story was not repeated.
Story first published: Wednesday, February 25, 2015, 16:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X