ரூ.11,000 கோடி முதலீட்டு திட்டத்தில் பி.எஸ்.என்.எல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அரசு தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அனைத்து விதமான சேவைகளையும் மேம்படுத்தவும், தொலைபேசி இணைப்பகங்கள் நவீனப்படுத்தவும் புதிதாக மொபைல் டவர்களை நிறுவவும் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

 

வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகளவில் இழந்த இந்த நேத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி பணிகளுக்காக 11,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய பி.எஸ்.என்.எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வருவாய் அதிகரிப்பு

வருவாய் அதிகரிப்பு

அரசுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரு நிறுவனங்களும் வருவாய் அதிகரிக்க பல திட்டங்களை தீட்டியுள்ளது. இதில் மேம்பட்ட வாடிக்கையாளர் சேவை மேம்பாடு மற்றும் சேவை திறன் உயர்வு ஆகியவை அடங்கும்.

ரவி சங்கர் பிரசாத்

ரவி சங்கர் பிரசாத்

தொலைதொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் முதலீட்டு முறைகளை இத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் லேக்சபாவிற்கு எழுத்து முறையில் அறிவித்தார்.

மொபைல் தளங்கள்

மொபைல் தளங்கள்

மேலும் ரவி சங்கர் பிரசாத் அளித்த அறிக்கையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மொபைல் சைட்டுகளை, 2ஜி சேவையில் 14,421 தளங்களையும்,. 3ஜி சேவையில் 10,605 தளங்களையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது இதன் மதிப்பு 4,804 கோடியாகும்.

தொலைபேசி இணைப்பகங்கள்
 

தொலைபேசி இணைப்பகங்கள்

மேலும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனது தொலைபேசி இணைப்பகங்கள் நவீனப்படுத்த உள்ளது. மேலும் எம்.டி.என்.எல் நிறுவனம் பல புதிய திட்டங்களில் முதலீட்டு செய்ய உள்ளது.

விரிவாக்கத்தில் பிரச்சனை

விரிவாக்கத்தில் பிரச்சனை

மேலும் கடந்த 2009-13ஆம் ஆண்டுகளில் பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரு நிறுவனங்களும் சில பிரச்சனைகளின் காரணமாக இத்துறை விரிவாக்கம் செய்ப்படவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL invests Rs 11,000 crore to improve services: Ravi Shankar Prasad

State-tun telecom company BSNL is investing an over Rs 11,000 crore to improve its all-round services including strengthening network, modernizing telephone exchanges and installing mobile towers in the naxal-dominated areas, Parliament was informed on Wednesday
Story first published: Thursday, February 26, 2015, 16:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X