ரூ.14,000 கோடி முதலீட்டில் 60 லட்சம் வீடுகள்!! பட்ஜெட் 2015

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களின் ஒன்றான "அனைவருக்கும் வீடு" என்ற திட்டத்தை மத்திய அரசு கூடிய விரைவில் தேசிய வீட்டு வசதி திட்டத்தின் மூலம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

 

இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு நிறைவு நாளில் இந்தியாவில் இருக்கும் அனைத்து குடும்பங்களும் நிரந்தர வீடு பெற வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம்

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம்

இத்திட்டத்தை மத்திய கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் வடிவமைக்கிறது, இத்திட்டத்துடன் நாட்டின் சுகதாரத்தை மேம்படுத்தும் திட்டமான ஸ்வச் பாரத் திட்டத்துடன் இணைக்கப்பட உள்ளது.

7 வருடம்

7 வருடம்

அடுத்த 7 வருடத்தில் ஆதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெரும் 2022ஆம் ஆண்டுக்குள் இந்திய கிராமப்புற மற்றும் நகரப்புற பகுதிகளில் சுமார் 60 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

திட்டங்கள்
 

திட்டங்கள்

மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள தேசிய கிராமின் அவாஸ் மிஷன் (GRAM) திட்டம் நாட்டில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளத இந்திரா அவாஸ் யோஜ்னா திட்டம் மாற்றி அமைக்க உள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் 70 சதவீத மக்கள் தொகை வாழும் கிராமபுறங்களில் அதிகளவிலான வீடுகள் அமைய உள்ளது.

60 இலட்சம் வீடுகள்

60 இலட்சம் வீடுகள்

தேசிய கிராமின் அவாஸ் மிஷன் (GRAM) திட்டத்தின் மூலம் அமையப்போகும் 60 இலட்சம் வீடுகளில், 40 இலட்சம் வீடுகள் கிராமப்புறத்திலும் 20 இலட்சம் வீடுகள் நகரப்புறத்திலும் அமைக்க மத்திய அரச திட்டமிட்டுள்ளது.

14,000 கோடி ரூபாய்

14,000 கோடி ரூபாய்

இத்திட்டத்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ள 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சுமார் 14,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.1.1 இலட்சத்தில்  வீடு

ரூ.1.1 இலட்சத்தில் வீடு

மத்திய அரசு தயாரித்துள்ள திட்டத்தின் படி ஒரு வீட்டுக்கு கழிப்பறை, தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் உட்பட்ட அனைத்திற்கும் 1.1 இலட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 இலட்சம் வீடுகளுக்கு 3.45 இலட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. நிதி ஒதுக்கீட்டை ஒப்பிடுகையில் அதிகப்படியான நிதி தேவைப்படுவதால் நிதி அமைச்சகம் இப்பரிந்துரையை பற்றி ஆலோசினை செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2015 allocates Rs 14,000 crore to building 6 crore houses by 2022

The government may soon come up with a National Housing Mission to fulfil Prime Minister Narendra Modi's vision of homes for all by 2022, when India completes 75 years of Independence.
Story first published: Monday, March 2, 2015, 12:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X