நாட்டின் உற்பத்தி அளவு 5 மாத சரிவை எட்டியது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டின் உற்பத்தி அளவு தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவை தழுவியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் உற்பத்தி ஆர்டர்களின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால் இத்தகைய நிலை என ஹெச்எஸ்பிசி உற்பத்தி நுகர்வு மேலாண்மை குறியீட்டை தொகுத்த மாக்கிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

மேலும் நாட்டின் உற்பத்தி அளவு பிப்ரவரி மாதத்தில் சுமார் 5 மாத சரிவை தழுவியுள்ளது.

ஹெச்எஸ்பிசி உற்பத்தி நுகர்வு மேலாண்மை குறியீடு

ஹெச்எஸ்பிசி உற்பத்தி நுகர்வு மேலாண்மை குறியீடு

மார்கிட் தொகுத்த ஹெச்எஸ்பிசி உற்பத்தி நுகர்வு மேலாண்மை குறியீடு கடந்த ஜனவரி மாதம் 52.9 புள்ளிகளாகவும், பிப்ரவரி மாதத்தில் 51.2 புள்ளிகளாகவும் இருக்கிறது. மேலும் 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் நாட்டின் உற்பத்தி அளவு வளர்ச்சி பாதையில் உள்ளது என்பது பொருள்.

உற்பத்தி அளவு

உற்பத்தி அளவு

கடந்த 5 மாதங்களில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நாட்டின் உற்பத்தி அளவு மற்றும் புது ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது என மார்கிட் நிறுவனத்தின் பொருளாதாரா வல்லுனரான போலியானா டி லிமா தெரிவித்துள்ளர்.

உள்நாட்டு தேவை
 

உள்நாட்டு தேவை

மேலும் கடந்த ஐந்து மாதங்களில் புதிய ஆர்டர்களின் அளவு சுமார் 51.9 புள்ளிகள் வரை குறைந்துள்ளது. மேலும் நாட்டில் உள்ளநாட்டு தேவை அதிகளவிவ்ல குறைந்ததால் உற்பத்தி அளவு பெருமளவில் சரிவை சந்தித்துள்ளது. நாட்டின் உற்பத்தி அளவு பிப்ரவரி மாதத்தை ஒப்பிடுகையில் 2014ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தை விட குறைவானதாகும்.

வரி பயன்

வரி பயன்

மேலும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் ஆர்டர்கள் குறைந்ததற்கு முக்கிய காரணம் மத்திய பட்ஜெட் அறிக்கை தான். புதிய பட்ஜெட்டிலி இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஏதேனும் வரி குறைப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களில் ஆர்டர் அளிப்பதை குறைத்துக் கொண்டது.

நாட்டின் வளர்ச்சி

நாட்டின் வளர்ச்சி

2015-16ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை எட்டும் எனவும் இதில் உற்பத்தி துறைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Manufacturing PMI dips to 5-month low in Feb

Manufacturing activity expanded at its slowest pace in five months in February as a slowdown in new orders dragged overall output, a business survey showed on Monday.
Story first published: Monday, March 2, 2015, 12:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X