3ஜி இன்டர்நெட் கட்டணத்தை 50% குறைக்க திட்டம்!! பி.எஸ்.என்.எல்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் இண்டர்நெட் கட்டணங்கள் உயர்ந்து வரும் நேரத்தில் மத்திய தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் தன்னுடைய 3ஜி இண்டர்நெட் கட்டணத்தை 50 சதவீதமளவிற்கு குறைக்க திட்டமிட்டுள்ளது.

 

இந்நிறுவனம் தற்போது பலகட்ட விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது, இதன் மூலம் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை 3 மடங்காக அதிகரிக்க இந்நிறுவனம் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இந்த கட்டண குறைப்பை அறிவிக்க உள்ளது.

3ஜி இன்டர்நெட் கட்டணத்தை 50% குறைக்க திட்டம்!! பி.எஸ்.என்.எல்

'எங்களுடைய 8-வது கட்ட விரிவாக்கத்தின் போது 3ஜி டேட்டா கட்டணங்களை குறைந்தபட்சம் 50 சதவீதமாகவது குறைக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,' என்று பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக உள்ள திரு.ஸ்ரீவடஸவ்.

இந்த நிறுவனம் மற்ற நிறுவனங்கள் 2ஜி இண்டர்நெட்டுக்கு வழங்கும் கட்டணத்திலேயே 3ஜி மொபைல் இண்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது. 1GB- க்கான 3ஜி மொபைல் இண்டர்நெட் டேட்டாவை ரூ.175-க்கும் மற்றும் 2GB-ஐ ரூ.251-ற்கும் தற்போது வழங்கி வருகிறது.

3ஜி இன்டர்நெட் கட்டணத்தை 50% குறைக்க திட்டம்!! பி.எஸ்.என்.எல்

'எங்களுடைய 3ஜி சேவை அளவில் 90 சதவீதத்தை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். நாங்கள் இப்பொழுது கட்டணத்தை திடீரென குறைத்தால், இணைய போக்குவரத்து அதிகரித்து நெட்வொர்க் வேகமாக இயங்குவதில் தடைபடும். போதுமான அளவிற்கு 8-வது கட்டத்தில் நாங்கள் இந்த வசதியை விரிவாக்கம் செய்த பின்னர், கட்டணத்தை குறைப்போம்' என்கிறார் ஸ்ரீவட்ஸவ்.

தற்போது ரூ.4800 கோடி மதிப்பீட்டில் 7-வது கட்ட நெட்வொர்க் விரிவாக்க திட்டத்தை செய்து வரும் இந்நிறுவனம், வருகிற ஜூன் மாதம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் 8-வது நெட்வொர்க் விரிவாக்கத் திட்டத்தையும் செயல்படுத்தும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதற்கான டெண்டர்களை 2015-16-ம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL to slash 3G internet rates by 50%

Against the trend of rising mobile internet tariff, state-run telecom company BSNL is likely to cut its 3G data rates by at least 50 per cent once the next phase of its network expansion is completed.
Story first published: Wednesday, March 4, 2015, 15:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X