முகேஷ் அம்பானி இடத்தை திலிப் சங்வி பிடித்தார்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: உலகின் முன்னணி வர்த்தக பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை உலகின் டாப் 500 பணக்காரர்கள் பட்டியலை பட்டியலை வெளியிட்டத்து. இப்பட்டியிலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 21 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 39வது இடத்தில் இருப்பதாக இந்நிறுவனம் அறிவித்தது.

 

ஆனால் இப்பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் மறுஆய்வு செய்யும்போது இப்பட்டியலில் 44வது இடத்தில் இடம்பெற்றிருந்த சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலிப் சங்வியின் சொத்து மதிப்பு 21.5 பில்லியன் டாலராக உள்ளது என போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 8 வருடமாக முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

(இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி!!)

திலிப் சங்வி

திலிப் சங்வி

இந்தியாவின் முன்னணி மருந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவரான திலிப் சங்வி போர்ப்ஸ் நிறுவனத்தின் மறுஆய்விற்கு பிறகு 21.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 44வது இடத்தில் இருந்து தற்போது 37வது இடத்திற்கு உயர்ந்துள்ளர். இந்தியார்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி அவர்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் சொத்தின் மதிப்பு சமார் 21 பில்லியன் டாலர் உடன் இப்பட்டியலில் 39வது இடத்தில் இருந்து 43வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரகவும், நிர்வாக இயக்குநரகவும் பொறுப்பு வகுக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்துடன் கடுமையாக போட்டி போட்டு வருகிறது.

அசிம் பிரேம்ஜி
 

அசிம் பிரேம்ஜி

இவர் பெங்களூரை தலைமையகமாக கொண்டு உலக முழுவதும் விரிந்து இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகுக்கிறார். இப்பட்டியலில் 19 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 48வது இடத்தில் உள்ளர். மேலும் இவர் 2 பில்லியன் டாலர் அளவு சொத்துக்களை தனது சொந்த அறக்கட்டளையின் முலம் நன்கொடையாக கொடுத்துள்ளார்.

ஷிவ் நாடார்

ஷிவ் நாடார்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவரான ஷிவ் நாடார் இப்பட்டியலில் 14.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 66வது இடத்தில் உள்ளார்.

ஹிந்துஜா சகோதரர்கள்

ஹிந்துஜா சகோதரர்கள்

ஹிந்துஜா சகோதரர்கள் 14.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 69வது இடத்தில் உள்ளது. இவர்கள் ஆட்டோமோட்டிவ், ரியல் எஸ்டேட், மற்றும் எண்ணெய் ஆகியவற்றில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

முதல் இடம்

முதல் இடம்

உலகளவில் இப்பிட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான பில் கேட்ஸ் 79.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். கடந்த 21 வருடத்தில் இவர் 16 வருடமாக முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கார்லோஸ் ஸ்லிம் மற்றும் வாரன் பஃபெட்

கார்லோஸ் ஸ்லிம் மற்றும் வாரன் பஃபெட்

பில் கேட்ஸ் தொடர்ந்து 2ஆம் இடத்தில் மெக்சிக்கோவின் கார்லோஸ் ஸ்லிம், 3வது இடத்தில் அமெரிக்க முன்னணி முதலீட்டு நிறுவனமான பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் நிறுவனரான வாரன் பஃபெட் பிடித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Shanghvi is richest Indian: Forbes

Dilip Shanghvi of Sun Pharmaceuticals, with a net worth of $21.5 billion, surpassed Mukesh Ambani as the world’s richest Indian on Wednesday, two days after the Reliance Industries Ltd. chief was ranked India’s wealthiest for the eighth consecutive year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X