ஸ்பெக்ட்ரம் ஏலம்: 3வது நாள் முடிவில் ரூ.77,000 கோடி நிதி திரட்டல்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் நடந்தி வரும் இந்தியாவின் மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 3வது நாள் முடிவில் சுமார் மொத்த ஏலத் தொகை 77,000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது என தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இரண்டவாது நாள் முடிவில் இதன் அளவு 65,000 கோடி ரூபாயாகவும், முதல் நாள் முடிவில் இதன் அளவு 60,000 கோடி ரூபாய் அளவு உயர்ந்த்தாகவும் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை முன்னிட்டு அனைத்து சந்தைகளும் மூடப்பட்டுள்ள நிலையிலும் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடந்தது.

17 சுற்றுகள்

17 சுற்றுகள்

மேலும் கடந்த 3 நாட்களில் 17 சுற்று ஏலம் முடிவடைத்துள்ளது இதில் மத்திய அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட சுமார் 80-90 சதவீதம் உயர்ந்துள்ளது. அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் 900 MHz பேண்ட் அலைகற்றைக்கு அதிகளவிலான போட்டி வருகின்றது.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

இந்த ஏலத்தில் நாட்டின் பெரிய தொலைதொடர்பு நிறுவனங்கள் விண்ணப்பித்தி விலையை விட பல மடங்கு குறைவாக சிறு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளது. இதன் மூலம் சிறு நிறுவனங்களின் சேவை முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

90 சதவீதம் உயர்வும்

90 சதவீதம் உயர்வும்

மேலும் மத்திய அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட 80-90 சதவீதம் வரையிலான உயர்வை அடைந்துள்ளது.

3 நிறுவனங்கள்
 

3 நிறுவனங்கள்

சந்தை ஆய்வு நிறுவனமான ஸ்டேண்டர்டு & புவர் ஆய்வில் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பார்தி ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் சந்தை மதிப்பு மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகளவில் உயரும் என தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஏல துவக்கம்

ஸ்பெக்ட்ரம் ஏல துவக்கம்

இந்திய தொலைதொடர்பு அமைச்சகம் மார்ச் 4ஆம் தேதி துவங்கிய ஏலத்தில் 380.75 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை முன்று அலைவரிசையில் விற்று வருகிறது. அதாவது 800 மெகாஹெட்ஸ், 900 மெகாஹெட்ஸ், 1800 மெகாஹெட்ஸ். மேலும் 5 மெகாஹெட்ஸ் அலைகற்றை 2100 மெகாஹெட்ஸ் அலைவரிசையில் 3ஜி சேவைக்காக ஏலம் விட உள்ளது. இதில் 2100 MHz அலைகற்றைக்கு போட்டி மிகவும் குறைவாக உள்ளதாகவும், நிறுவனங்கள் ஏலத்தொகை விண்ணப்பம் கூட செய்யவில்லை என மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் ஒரு 800 மெகா ஹெட்ஸ் சிடிஎம்ஏ அலைகற்றைக்கு 3,646 கோடி ரூபாய் என ஒரு 900 மெகா ஹெட்ஸ் 3,980 கோடி ரூபாய், ஒரு 1,800 மெகா ஹெட்ஸ் 2,191 கோடி ரூபாய், ஒரு 2,100 மெகா ஹெட்ஸ் 3,705 கோடி ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளது.

8 நிறுவனங்கள்

8 நிறுவனங்கள்

இந்த ஏலத்தில் அம்பானி சகோதரர்கள் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் (முகேஷ் அம்பானி), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (அனில் அம்பானி), பார்தி ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார், யூனிநார், டாடா டெலி சர்வீஸ், மற்றும் ஏர்டெல் ஆகிய 8 நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Spectrum: bids cross ₹77,000 cr on Day 3

At the end of Day Three, the total revenue for the Centre crossed the ₹77,000- crore mark, which indicated aggressive bidding. Day Two had ended with bids worth ₹65,000 crore.
Story first published: Saturday, March 7, 2015, 11:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X