பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீடு எடுப்பது எப்படி?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி கடந்த 10 வருடங்களின் பல மடங்கு உயர்ந்திருந்தாலும், அடிப்படையான விஷயத்தை பெற்றோர்கள் மறந்து விடுகிறார்கள். குழந்தைகளுக்கான காப்பீட்டின் முக்கியதுவத்தை இன்றளவும் பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை.

இக்காப்பீட்டின் மூலம் குழந்தையின் நலம் மற்றும் பாதுகாப்பு பன்மடங்கு உயர்வதுடன் மட்டும் அல்லாமல், பெற்றோர்கள் குழந்தை நலக்கான செய்யப்படும் மருத்து செலவுகள் அதிகளவில் குறையவும் வாய்ப்புள்ளது.

மருத்துவ காப்பீடு
 

மருத்துவ காப்பீடு

குடும்பத்திற்கு புது வரவாக வந்துள்ள குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு எடுக்காமல் விட்டு விடுவது மிகப்பெரிய தவறு. இத்தகைய காப்பீடு மருத்துவ செலவுகளை ஈடு செய்ய மருத்துவ காப்பீடு பெரிய அளவில் உங்களுக்கு உதவிடும். மேலும் இதன் மூலம் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை அளித்திட முடியும்.

குழந்தைகளுக்கான காப்பீடு

குழந்தைகளுக்கான காப்பீடு

காப்பீடு வழங்கும் சில நிறுவனங்கள் புதிதாக பிறந்த குழந்தைகளின் பெயரில் தனி பாலிசி வழங்குவதில்லை என்றாலும் கூட, தற்போது உங்கள் குடும்பத்திற்கு எடுக்கப்பட்டுள்ள குழு காப்பீடு அல்லது ஃபேமிலி ஃப்லோட்டர் (Family Floater) பாலிசியுடன் குழந்தையை இணைத்துக் கொள்ளும் வசதி உள்ளது.

வயது

வயது

குழந்தை பிறந்து 90 நாட்கள் முடிவடைந்து விட்ட நிலையில், பெற்றோரின் தற்போதைய காப்பீடு பாலிசியில் குழந்தையின் பெயரை பொதுவாக காப்பீடு வழங்கும் நிறுவனம் சேர்த்துக் கொள்ளும். மருத்துவ காப்பீடு பாலிசிகளில் சில திட்டத்தின் கீழ் மகப்பேறு பயன்களும் கூட கிடைக்கும். அதன் படி, பிரசவத்துக்கு முன்னான பராமரிப்பு மற்றும் தடுப்பூசி செலவுகளையும் கூட காப்பீடு ஈடு செய்யும்.

நிபந்தனைகள்
 

நிபந்தனைகள்

ஆரம்பத்தில் இருந்தே பாதுகாப்பு வேண்டும் என நீங்கள் நினைத்தால், குழந்தை பிறந்த ஒரு வார காலத்திற்குள் காப்பீடு நிறுவனத்திற்கு இத்தகவலை தெரிவித்திட வேண்டும். குறிப்பிட்ட பாலிசியின் கீழ் அதிகப்படியான காப்பீட்டை, காப்பீட்டு திட்டங்கள் வழங்கும். ஒரு வேளை, பெற்றோர்கள் வாங்கியுள்ள பாலிசி குழந்தை பிறந்து 90 நாட்களில் அதற்கு உண்டான செலவுகளுக்கு ஈடு செய்வதாக அமைந்தால், வருடாந்திர புதுப்பித்தலின் போது மீதமுள்ள காப்பீட்டை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

வருடாந்திர பாலிசி புதுப்பித்தலின் போது, போதிய ஆவணங்களுடன் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழின் நகல், மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஆவனைகள் ஏதேனும் மற்றும் மகப்பேறு முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய சான்றிதழ் ஆகியவைகளை காப்பீடு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

ப்ரீமியம்

ப்ரீமியம்

தேவையான ஆவணங்களை பெற்றவுடன், குழந்தையின் காப்பீட்டை சேர்த்த பிறகு, காப்பீட்டு நிறுவனம் ப்ரீமியம் தொகையை மீண்டும் கணக்கிடும். திருத்தப்பட்ட ப்ரீமியம் தொகையை செலுத்திய பிறகு, குழந்தைக்கும் சேர்த்து பாலிசி மீண்டும் வழங்கப்படும்.

பிரீமியம் தொகை

பிரீமியம் தொகை

பாலிசியை வழங்குவதற்கு முன்பு, புதிய பிரீமியத்தை காப்பீடு நிறுவனம் மீண்டும் கணக்கிட வேண்டும். குழந்தையின் காப்பீட்டிற்கான செலவை சேர்த்து விட்டு, பிரீமியத்தை திருத்த வேண்டும். நீங்கள் புதிய பிரீமியத்தை செலுத்தி விட்டால், பாலிசி உடனே அமுலுக்கு வந்து விடும். மேலும் குழந்தைக்கும் காப்பீடு வழங்கப்படும்.

கவனிக்க வேண்டியவை

கவனிக்க வேண்டியவை

- 21 வயதை அடையும் வரை குழந்தைகளுக்கு ஃபேமிலி ஃப்லோடர் பாலிசி பொருந்தும்.

- 5 வயதை அடைந்த குழந்தைகளுக்கு தனி காப்பீடு பாலிசியை காப்பீடு நிறுவனம் வழங்கும்.

- காப்பீடு நிறுவனம் கேஷ்லெஸ் (பணம் செலுத்த வேண்டியதில்லா) கார்டு வழங்க வேண்டும் என்றால் புகைப்படத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Get Health Insurance For A Newborn

There are various new practices designed to ensure the health of children that many parents rush to put in place. Storing the stem cells from the blood of the umbilical cord as a safety measure against disease in the future is one of the happening trends seen in this space.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more