யூரோவிற்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு 12 வருடத்தில் புதிய உச்சம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிட்னி: அமெரிக்காவில் பிப்ரவரி மாத்தின் வலுவான ஜாப்ஸ் டேட்டா மற்றும் வேலையில்லாதோர் எண்ணிக்கை 5.5 சதவீதமாக குறைந்துள்ளதால் அமெரிக்க அரசு வட்டி உயர்வு நடவடிக்கையை முன்கூட்டியே எடுக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக அமெரிக்க டாலரின் மதிப்பு, ஆசிய சந்தை வர்த்தகத்தில் யூரோ மற்றும் யென் நாணயங்களுக்கு எதிராக சுமார் 12 வருட உயர்வை எட்டியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்களும் அதிகளவில் பாதிக்க உள்ளது.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

இதன் மூலம் செவ்வாய் கிழமை வர்த்தகத்தில் ஆசிய பங்குச்சந்தைகள் அனைத்தும் அதிகப்படியான சரிவை சந்தித்துள்ளது. மேலும் ஜப்பான் நிக்கி குறியீடு 0.6 சதவீதம் சரிந்தது.

வட்டி உயர்வு

வட்டி உயர்வு

2015ஆம் ஆண்டின் மத்தியில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் வேலையில் ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய பில்லியன் டாலர் பணத்தை ஒதுக்க திட்டம் தீட்டி வருகிறது.

ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி

ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி

ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் பகுதிகளில் நிலவும் பொருளாதார மந்த நிலையை குறைக்க ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி டிரில்லியன் யூரோ பத்திரங்களை வாங்கும் திட்டத்தை திங்கட்கிழமை துவங்கியுள்ளது.

யூரோ மதிப்பு

யூரோ மதிப்பு

திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ மதிப்பு 1.0785 டாலரில் இருந்து 1.0822 டாலராக குறைந்தது. கடந்த செப்டம்பர் 2003ஆம் ஆண்டு இதேபோன்ற நிலையை யூரோ அடைந்தது குறிப்பிடதக்கது.

யென் மதிப்பு

யென் மதிப்பு

ஜூலை 2007ஆம் ஆண்டுக்கு பின் அமெரிக்க டாலருக்கு எதிரான ஜப்பான் யென் மதிப்பு 122.02 என்ற அளவை எட்டவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dollar at 12-year high against euro, emerging markets spooked

The US dollar scored multi-year highs against the euro and yen in Asia on Tuesday amid starkly diverging outlooks for interest rates globally, while currencies from emerging markets came under mounting pressure from risk aversion.
Story first published: Tuesday, March 10, 2015, 14:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X