2,000 கார்களை விற்றே தீர்வோம்.. வால்வோ இந்தியா நம்பிக்கை..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ, 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் 2,000 கார்களை விற்கப்போவதாக இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. 2014ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 1,200 கார்களை விற்றுள்ளது.

 

இந்திய சந்தையில் கார் விற்பனையை துவங்கி சில வருடங்களே ஆன நிலையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக இந்நிறுவனத்தின் இந்திய கிளையின் நிர்வாக இயக்குனர் தாமஸ் தெரிவித்தார்.

வால்வோ இந்தியா

வால்வோ இந்தியா

2007ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனையை துவங்கிய இந்நிறுவனம், தற்போது உற்பத்தி ஆலையை கூடிய விரைவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தாமஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வால்வோ கார்களின் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

புதிய கார்கள்

புதிய கார்கள்

2015ஆம் நிதியாண்டில் நான்கு புதிய மாடல் கார்களை வால்வோ வெளியிட உள்ளதாகவும், இதில் ஆடம்பர பரிவை சேர்ந்த XC90 ரக காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

விற்பனை

விற்பனை

தற்போது இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் வால்வோ, தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் பிரத்தியேக ஷோரூம் கொண்டு விற்பனை செய்து வருகிறது. இதில் எஸ்80, எஸ்60, எக்ஸ்சி60, வி40 மற்றும் எக்ஸ்சி90 ரக கார்களை விற்பனை செய்து வருகிறது.

கார் தயாரிப்பு நிறுவனங்கள்
 

கார் தயாரிப்பு நிறுவனங்கள்

கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் விற்பனை கிளைகள் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. நாட்டின் ஆட்டோமொபைல் உற்பத்தி சந்தை வேகமாக வளர்ந்து வருவதால் நாட்டின் ஏற்றுமதி அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Volvo Auto India targets to sell 2,000 cars this year

Swedish luxury carmaker Volvo Auto India (VAI) today said it plans to sell 2,000 cars this year in the country as against 1,200 units in 2014.
Story first published: Saturday, March 21, 2015, 16:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X