அமைச்சர்களின் ஹோட்டல் பில் ரூ.25 கோடி.. அதிர்ந்துபோன மக்களவை செயலகம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மே 2014 வருடம் நடந்த பொது தேர்தலின் போது, டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு ஐடிடிசி ஹோட்டலில் வசதி செய்து கொடுத்திருந்தது அரசு.

 

விடுதி வசதிகளுக்காக ஐடிடிசி அளித்த கட்டணத் தொகை, மக்களவை செயலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதி வசதிகளுக்காக மட்டும் மத்திய அரசு 25 கோடி ரூபாய் செலுத்தி வேண்டியுள்ளது.

350 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

350 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் நடைபெற்ற நாள் முதல் இன்று வரை ஐடிடிசி ஹோட்டலில் 350 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கியிருந்தனர். தேர்தலுக்கு பின் இவர்களுக்கு வேறு சில இடங்களில் இருப்பிடம் அளிக்கப்பட்டும் 50 உறுப்பினர்கள் இன்னும் ஐடிடிசி ஹோட்டலிலேயே தங்கி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவை செயலகம்

மக்களவை செயலகம்

ஐடிடிசி ஹோட்டலில் தங்கியிரும் தலைவர்களை, விடுதியை உடனடியாக காலி செய்துவிட்டு தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்லவும், இனி உங்களது விடுதி செலவுகளை அரசு ஏற்காது என்றும் மக்களவை செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால் பல தலைவர்கள் இரவோடு இரவாக ஹோட்டலை காலி செய்தனர்.

6 வருடம்
 

6 வருடம்

முன்னாள் மத்திய அமைச்சரான ஜெகதீஷ் டைட்லர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று வியாழக்கிழமை, தான் தங்கியிருந்த 3 அறைகளை காலி செய்தார். மக்களவையில் 2009ஆம் ஆண்டு உறுப்பினராக இருந்தபோது பதிவு செய்யப்பட்ட இந்த அறைகளை நேற்று தான் காலி செய்துள்ளார்.

அரசை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை

அரசை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை

ஜெகதீஷ் டைட்லர் கடந்த 6 வருடமாக காங்கிரஸ் அரசின் ஆதரவுடன் ஐடிடிசி ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார் என்ற கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

மக்களவை செயலகம் வடுதி வசதிகளுக்காக ஒரு நாளைக்கு 7.5 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது. இதுக்குறித்து நிதி அமைச்சகத்திற்கு, மீதமுள்ள தொகையை செலுத்தவும், இதர திட்டங்களுக்காவும் நிதியுதவி அளிக்குமாறு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

முக்கிய நேரங்களில் மட்டும் தான்

முக்கிய நேரங்களில் மட்டும் தான்

அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டம் மற்றும் பணி நிமித்தமாக தலைநகர் வரும் போது மட்டுமே இனி ஹோட்டலில் தங்குவார்கள் என மக்களவை செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Centre gets a Rs. 25-cr. bill on MPs’ hotel stay

The government has run up a bill of Rs. 25 crore on the hotel stay of Lok Sabha members in the capital since the May 2014 general elections
Story first published: Friday, March 27, 2015, 13:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X