இன்போசிஸ் பணியாளர்களுக்கு 6.5 சதவீத ஊதிய உயர்வு.. அப்ப நமக்கு?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், தனது பணியாளர்களுக்கு சராசரியாக 6.5 சதவீத ஊதிய உயர்வை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

2015ஆம் நிதியாண்டு துவங்கும் வேளையில் தனியார் நிறுவனங்கள், தங்களது பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனம் தனது பணிகளை முன்கூட்டியே துவங்கியுள்ளது.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

இன்போசிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்நிறுவனத்தின் சிறந்த பணியாளர்களுக்கு 9 சதவீத ஊதிய உயர்வும், ஆன்சைட்டில் பணியாற்றுபவர்களுக்கு 2 சதவீத ஊதிய உயர்வும் அளிக்க முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 1

ஏப்ரல் 1

சம்பள உயர்வுக்கான நடவடிக்கைகள், இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வரும் 55 நாடுகளிலும் நடைபெற்றதாகவும், ஊதிய உயர்வுக்கான கடிதங்கள் மார்ச் 27ஆம் தேதி அளிக்கப்படும் எனவும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வித்தியாசம்

வித்தியாசம்

இந்நிறுவனத்தில் சாதாரண பணியாளர்களுக்கும், சிறந்த பணியாளர்களுக்கும் மத்தியில் இருக்கும் சம்பள உயர்வு வித்தியாசம் அதிகளவில் உள்ளது என ஐகியா மனிதவள மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஐடி நிறுவனங்கள் சிறந்த பணியாளர்களை நிறுவனத்தில் நிலைத்திருக்க பல புதிய வழிகளை கையாண்டு வருகிறது. சிலர் பென்ஸ் கார் முதல் உலக சுற்றுலா வரை அளித்து வருகின்றனர்.

பதவி உயர்வு
 

பதவி உயர்வு

இன்போசிஸ் நிறுவனத்தில் விஷால் சிக்கா சீஇஓ-வாக நியமனம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் 5,000 பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் 5,000 பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க இன்போசிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஈயமோ.. பித்தளையோ..

ஈயமோ.. பித்தளையோ..

இந்த வருஷம் சம்பள உயர்வு வருமா? வரும் ஆனா வராது...

ஐடி நிறுவனத்தில் 6.5% ஊதிய உயர்வு என்றால் வெளியில் செல்லும் அளவிற்கு சம்பளம் உயர்வு இருக்கும். ஆனா நமக்கு சம்பளமே வெளியில் சொல்லும் அளவில் இல்லை என்று புலம்புவரிகளின் எண்ணிக்கை தான் இங்கு அதிகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys gives average pay hike of 6.5%

Infosys has given an average salary increase of 6.5% to employees for the year starting April 1, like last year.
Story first published: Friday, March 27, 2015, 11:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X