இக்கட்டான சூழ்நிலையில் ஆர்பிஐ.. வட்டி வகிதத்தைக் குறைக்க வலியுறுத்தும் வங்கிகள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 2015-16ஆம் நிதியாண்டின் முதல் நிதியியல் கொள்கையை ரிசர்வ் வங்கி நாளை வெளியிட உள்ளது. நாட்டின் பொருளாதார வளரச்சியை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை குறைக்கும் என பல தரப்பினர் எதிர்பார்த்து வருகினறனர்.

2015ஆம் ஆண்டு துவக்கம் முதல் ரிசர்வ் வங்கி இரண்டு முறை வட்டி விகிதத்தைக் குறைத்தும் வங்கிகள் தங்களது நிதிநிலையைக் கணக்கிட்டு வட்டி விகிதத்தைக் குறைக்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ரெப்போ வகிதத்தை குறைக்க நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதியமைச்சகம் ஆகியவை ரிசர்வ் வங்கியை நிர்பந்தம் செய்து வரும் நிலையில் ரகுராம் ராஜன் நாளை நாணய கொள்கையை வெளியிட உள்ளார்.

வட்டி வகிதம்

வட்டி வகிதம்

கடந்த 2 மாதத்தில் ரிசர்வ் வங்கி, 25 அடிப்படை புள்ளிகள் என்ற வீதத்தில் 2 முறை வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. இதன் படி ரெப்போ விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வங்கி இருப்பு விகிதம்

வங்கி இருப்பு விகிதம்

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், வட்டியைக் குறைக்கும் விதத்தில், ரிசர்வ் வங்கி இயக்குநர் ரகுராம் ராஜன் அறிவிக்க உள்ள நிதியியல் கொள்கையில் வங்கி கடன் இருப்பு விகிதம் (CRR) குறைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

பொதுவாக ரகுராம் ராஜன் குறுகிய கால வளர்ச்சியில் அதிகம் நாட்டம் காட்டாமல், நீண்ட கால வளர்ச்சி அடைப்படையிலேயே கொள்களை வகுத்து வருகிறார்.

இதன் படி நாளை அறிவிக்க உள்ள நாணய கொள்ளையில் வங்கி இருப்பு விகிதம் மட்டுமே குறைய வாய்ப்புள்ளது.

 

அமெரிக்க வட்டி உயர்வு

அமெரிக்க வட்டி உயர்வு

அமெரிக்க அரசின் வட்டி உயர்விற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகி வருவதால் வருகிற செப்டம்பர் மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி வகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பாதிப்பைச் சமாளிப்பதற்கேற்ப ரிசர்வ் வங்கி தனது கொள்கைளை வடிவமைத்து வருகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Should Raghuram Rajan cut repo rate again tomorrow?

The industry wants, the banking sector wants it and the finance minister wants it. Reserve Bank of India (RBI) has already heeded to their pressure, twice.
Story first published: Monday, April 6, 2015, 16:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X