'அடிச்சித் தூக்கப் போறோம்.. இந்தியாவில் 1 பில்லியன் டாலர் குவிக்கப் போறோம்!' - ஆப்பிள் நம்பிக்கை

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: 2015ஆம் நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் 1 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அடைவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தனது வர்த்தகத்தை, வேண்டா வெறுப்பாகத்தான் முதலில் துவங்கியது. தனது புது தயாரிப்புகளை உலகெல்லாம் முதலில் விற்பனைக்கு விட்டு, கடைசியில்தான் இந்தியாவுக்கு அனுப்பி வந்தது. இப்போது இந்நிறுவனத்தின் முக்கியச் சந்தைகளுள் ஒன்றாகிவிட்டது இந்தியா.

3 மடங்கு உயர்வு

3 மடங்கு உயர்வு

2014ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் இந்திய வர்த்தக அளவு 40 சதவீதம் அதிகரித்து 4,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2011-12ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆப்பிள் இந்திய கிளை தெரிவித்துள்ளது.

1 பில்லியன் டாலர்

1 பில்லியன் டாலர்

இந்திய சந்தையில் இந் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 2015ஆம் நிதியாண்டில் 1 பில்லியன் டாலரை எட்டும் என ஆப்பிள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மொபைல் விற்பனை

மொபைல் விற்பனை

2014-15ஆம் நிதியாண்டில் சுமார் 13 லட்சம் மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளது, கடந்த ஆண்டில் இது 9.28 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் வர்த்தக அளவு சுமார் 42 சதவீத உயர்வை சந்தித்துள்ளது.

ஆடம்பர சந்தை
 

ஆடம்பர சந்தை

ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு இந்திய சந்தையில் துவக்கம் முதலே ஆடம்பர பொருட்கள் என்ற தகுதி உள்ள நிலையில், ஆடம்பர பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளதால் இந்நிறுவனத்தின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் ஆடம்பர சந்தை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

 சென்னை

சென்னை

உலகளில் ஆடம்பர சந்தைகளாக உறுமாறி வரும் நகரங்களில் சென்னை இடம்பெற்றுள்ளது. இதைப் பற்றி முழுமையாகப் படிக்க இதைக் கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple's India revenue hits $1bn in FY15

Apple didn't take India seriously in the early years of the global iPhone-iPad rage. But now, the country is likely one of its fastest growing markets. The company is said to have touched $1 billion in revenue in India in the financial year ended March 31, 2015.
Story first published: Wednesday, April 8, 2015, 13:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X