509 மருந்துகளின் விலை உயர்விற்கு மத்திய அரசு ஒப்புதல்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கீல்வாதம், நீரிழிவு, ஈரல் அழற்சி, உயிருக்கு ஆபத்தான நோய் தொற்று, புற்றுநோய் மற்றும் மலேரியா போன்ற நோய்களைத் தீர்க்கும் மருந்துகளின் விலையை 3.84 சதவீதம் வரை உயர்த்த மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

 

இதற்கான அறிக்கையைக் கெமிக்கல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய மருந்துகளின் விலை நிர்ணய ஆணையம் (NPPA) வெளியிட்டுள்ளது.

கடைசி ஸ்லைடரை மறக்காமல் பார்க்கவும்.

விலை உயர்வு

விலை உயர்வு

தேசிய மருந்துகளின் விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2014-ம் ஆண்டு மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில், மருந்து கட்டுப்பாட்டுச் சட்டம் 2013- படி விலை உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளதாக இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சில முக்கிய மருந்துகளின் விலை உயர்ந்தப்பட்டுள்ளது, மீதமுள்ள மருந்துகளின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

500 மருந்துகள்

500 மருந்துகள்

இதன் மூலம் நாட்டு மக்களுக்கு அதிகளவில் பயன்படுத்தும் 509 மருந்துகளின் விலை உயர உள்ளது. இதனால் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை அடையும்.

 டி.ஜி. ஷா
 

டி.ஜி. ஷா

மத்திய அரசு ஆண்டுக்கு ஒரு முறைக்கு மேல் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்த வழி வகுக்காமல் விலை உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று இந்திய பார்மசூடிக்கல்ஸ் ஒருங்கிணைப்பு அமைப்பின் (ஐபிஏ) பொதுச் செயலர் டி.ஜி. ஷா தெரிவித்துள்ளதாக ஹிந்து நாளிதல் தெரிவிக்கிறது.

கருத்தடை சாதனங்கள்

கருத்தடை சாதனங்கள்

மத்திய அரசு விலை உயர்வுக்கு அனுமதிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் கருத்தடை சாதனங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

ஆன்லைனில் "அந்த" பொருட்களின் விற்பனை அமோகமாம்!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Your Monthly Medicine Bill Just Got Pricey

The NDA government has allowed pharmaceutical companies to increase prices of 509 essential medicines used for treating ailments like arthritis, diabetes, hepatitis, fatal infections, malaria and cancer by 3.84 per cent with effect from April 1.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X