ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி வெளியேறினார்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைக் கலாநிதி மாறன் கைகழுவிய பின், இந்நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளும் அஜய் சிங்கிடம் வந்தது.

 

ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தில் அஜய் சிங் பல மாற்றங்களைச் செய்து வரும் நிலையில் இந்நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரியான கனிஸ்வரன் அவிலி நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி வெளியேறினார்!

கலாநிதி மாறன் நிர்வாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இந்நிறுவனத்தில் இணைந்த கனிஸ்வரன், தனது சொந்த விருப்பத்தின் பெயரில், புதிய துறை மற்றும் புதிய வேலையைத் தேர்ந்தெடுக்க உள்ள காரணத்தினால் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாகத் தெரிவித்தார்.

இவரது தலைமையில், இந்நிறுவனம் பல புதிய சலுகை திட்டங்களை அறிவித்து, இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்தது.

பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி இந்நிறுவனத்தின் நிறுவனரான அஜய் சிங் காலாநிதி மாறன் மற்றும் கேஏஎல் நிறுவனம் வைத்திருக்கும் 58.46 சதவீத ஸ்பெஸ்ஜெட் நிறுவன பங்குகளைக் கைபற்றி மீண்டும் நிறுவனத்திற்குள் நுழைந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

First top exit at SpiceJet after takeover

In the first big management change under new promoter Ajay Singh, SpiceJet's chief commercial officer Kaneswaran Avili has resigned from the low-cost carrier (LCC).
Story first published: Saturday, April 11, 2015, 16:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X