எஸ்பிஐ வங்கியை விடக் குறைவான வட்டியில் வீட்டுக் கடன்: ஹெச்டிஎஃப்சி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை வெளியீட்டுக்குப் பின் நாட்டில் அனைத்து வங்கிகளும் வட்டிவகிதங்களைக் குறைத்து வரும் நிலையில், ஹெச்டிஎஃப்சி நிறுவனம் வீட்டுக் கடனுக்கான வட்டி வகிதத்தை 9.9சதவீதமாகக் குறைத்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி நிறுவனம் தனது வீட்டுக்கடன் வட்டி வகிதத்தை 20அடைப்படை புள்ளிகள் குறைத்து 9.9 சதவீதமாகக் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வட்டிக் குறைப்பு ஏப்ரல் 13ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் அமலாக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈஎம்ஐ

ஈஎம்ஐ

இந்த வட்டிக்குறைப்பின் மூலம் கடன் பெறுபவர்களின் வட்டி பணம் கணிசமாக மிச்சப்படுத்தப்படும்.

உதாரணமாக, வட்டி குறைப்பிற்குப் பிறகு 20 வருட, 50 லட்ச ரூபாய் கடனின் ஈஎம்ஐ-யில் மாதம் 663 ரூபாய் சேமிக்கமுடியும். வட்டிக் குறைப்பிற்குப் பிறகு இக்கடனின் ஈஎம்ஐ தொகை 48,583 ரூபாயாகக் குறையும், அதற்கு முன் இதன் அளவு47,920 ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.

 

ஹெச்டிஎஃப்சி

ஹெச்டிஎஃப்சி

இந்த வட்டிக்குறைப்பு புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகவும் அதிகளவில் வட்டி பணத்தைச் சேமிக்கவும்முடியும். மேலும் இந்தக் குறைப்பு வங்கியின் பழைய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என ஹெச்டிஎஃப்சிதெரிவித்துள்ளது.

பிற வங்கிகள்

பிற வங்கிகள்

ஐசிஐசிஐ வங்கி 25 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும்இன்னும் வரவில்லை. எனவே இவ்வங்கி தற்போது 10.1% வட்டி வகிதத்தில் வீட்டுக்கடன் அளிக்கிறது.

எஸ்பிஐ

எஸ்பிஐ

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பெண்களுக்கான வீட்டுக் கடனுக்கு 9.95% வட்டி வகிதமும்,மற்றவர்களுக்குப் 10% வட்டி வகித்ததில் வீட்டுக் கடன் அளித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC cuts home loan rate to 9.9%, EMIs to come down

The country's largest housing finance company HDFC Limited has brought down its lending rate by 20 basis points to 9.9% which is lower than what is being charged by State Bank of India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X