ஈ-காமர்ஸ் சந்தையில் மும்பை தாராவி கைவினைஞர்கள்.. பன்னாட்டு நிறுவனங்களுக்குச் பலத்த அடி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில், ஆயிரக்கணக்கானோர் கைவினைப் பொருட்கள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் பாலிவுட் நடிகர்கள் பயன்பாட்டிற்கும், உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவரும் நிலையில், இந்தியா முழுவதும் விற்பனை செய்ய இவர்கள் ஈ-காமர்ஸ் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். (மிகவும் சரியான முடிவு..)

இதனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இவர்கள் உருவெடுத்துள்ளனர். வாங்க... இவர்களைப் பற்றிய முழுமையாகத் தெரிந்துகொள்வோம்.

முகமத் முஜாஹித் ஹுசைன்
 

முகமத் முஜாஹித் ஹுசைன்

மும்பையில் 40 வருடமாக லெதர் ஜாக்கெட் உற்பத்தில் ஈடுப்பட்டு வரும் முகமத் முஜாஹித் ஹுசைனின் தயாரிப்பை பாலிவுட் நடிகர் அமீர் கான் தனது தூம் 3 படத்தில் பயன்படுத்திய பிறகு இவரின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது.

தற்போது இவர் தனது தயாரிப்புகளை இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தாராவிமார்கெட்.காம் தளத்தில் மூலம் விற்க முடிவு செய்துள்ளார்.

எல்லாதுக்கும் விளம்பரம் தேவை...

எல்லாதுக்கும் விளம்பரம் தேவை...

40 வருடமாகத் தோல் பொருட்களைச் செவ்வன செய்து வரும் இவருக்கு, இது நாள் ஒரு அங்கீகாரம் கிடைவில்லை. அமிர்கானின் செயலுக்குப் பின் இவரது வர்த்தகம் பட்டை கிளப்புகிறதாம்.

30 சதவீத உயர்வு

30 சதவீத உயர்வு

DharaviMarket.com தளத்தில் இவர் இணைந்த பிறகு, இந்தத் தளத்தின் விற்பனை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாராவிமார்கெட்.காம் நிறுவனம் ஒரு லாபம் நோக்கமற்ற அமைப்பாகும்.

மும்பை டூ இந்தியா

மும்பை டூ இந்தியா

மும்பை மட்டும் சுற்றி வந்த எனது தயாரிப்புத் தற்போது இந்தியாவின் முக்கியப் பகுதிகளிலும் காணப்படுகிறது. குறிப்பாகக் கூர்கான், பெங்களூரு பகுதிகளில் இருந்து அதிகப்படியான வாடிக்கையாளர்கள் லெதர் ஜாக்கெட் மற்றும் பேக்களை விரும்பி ஆர்டர் செய்வதாக முகமத் ஹுசைன் தெரிவித்தார்.

தாராவிமார்கெட்.காம்
 

தாராவிமார்கெட்.காம்

தாராவி என்பது குடிசைப் பகுதி அல்லது சேரிப் பகுதி என்னும் பிம்பத்தை உடைக்கவே இந்த இணைய தளத்தை உருவாக்கியுள்ளோம்.

தற்போது தாராவி பகுதியை மக்கள் சிறு தொழில் உற்பத்தி மற்றும் கைவினை பொருட்களுக்கான இடமாகப் பார்க்க துவங்கியுள்ளனர் என்று இந்நிறுவனத்தைத் துவங்கிய மேகா குப்தா தெரிவித்துள்ளார்.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

இத்தளத்தின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் உடன் பிப்ரவரி மாதம் இணைந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஒரு மாத்தில் தாராவிமார்கெட்.காம் நிறுவனத்தின் வர்த்தகம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

புதிய ஆர்டர்

புதிய ஆர்டர்

ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்களின் இணைப்பின் மூலம் ஹூசைன் போன்ற பலரின் தயாரிப்புகள் பிரபலம் அடையவும், பலருக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகிறது என மேகா தெரிவித்தார்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தாராவிமார்கெட்.காம் தளம் ஸ்னாப்டீல் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் Tribal Cooperative Marketing Development Federation of India நிறுவனத்துடனும் இணைந்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள்

பன்னாட்டு நிறுவனங்கள்

இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்திய சந்தையில் பணச் சம்பாதிக்க வந்த நிறுவனங்களுக்கு இந்த தாராவிமார்கெட்.காம் மிகப்பெரிய போட்டியாக இருக்கும்.

இந்திய தயாரிப்பு

இந்திய தயாரிப்பு

இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் குறைய மக்கள் மத்தியில் இருக்கும் பன்னாட்டு பொருட்களின் மீதான மோகத்தைக் குறைக்க வேண்டும். இந்திய பொருட்களைப் பயன்படுத்துவதில் பெருமை அடையும் மனப்பான்மை பெறவேண்டும்.

குறிப்பாக இத்தகைய எண்ணம் இளைஞர்கள் மத்தியில் உருவாகினால் கூடிய விரையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்தியா சந்திக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

E-commerce puts Dharavi artisans in the limelight

Mohammed Mujahid Hussain, is much sought after for the leather jackets he makes. NoW he decided to sell his wares through DharaviMarket.com.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more