டிசிஎஸ் பணியாளர்களுக்கு ஒன் டைம் போனஸ்.. ரூ.2,628 கோடி நிதி ஒதுக்கிய நிர்வாகம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் பங்குச்சந்தையில் சந்தையில் குதித்து 10 ஆண்டுகள் நிறைவுற்றதை சிறப்பிக்கும் வகையில் பணியாளர்கள் அனைவருக்கும் நிர்வாகம் ஒன் டைம் போனஸ் அளிக்க உள்ளது.

இதற்காக டிசிஎஸ் நிர்வாகம் சுமார் 2,628 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

டிசிஎஸ்

டிசிஎஸ்

இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் டிசிஎஸ் கிளைகளில் சுமார் 3,19,000 பேர் பணியாற்றி வருகின்றனர். டிசிஎஸ் நிறுவனத்தில் குறைந்தது ஒரு ஆண்டு பணியாற்றிய அனைவரும் இந்த போனஸ் பெறத் தகுதி உடையவர்கள் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அது சரி போனஸா எவ்வளவு கிடைக்கும்?

அது சரி போனஸா எவ்வளவு கிடைக்கும்?

பணியாளர்களுக்கு வருடத்திற்கு ஒரு வார சம்பளத்தை கணக்கீட்டு போனஸாக வழங்கப்படும், ஆதாவது 3 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் தற்போதைய சம்பளத்தில் 3 வார சம்பளம் போனஸ் பணமாகக் கிடைக்கும் என நிர்வகம் தெரிவித்துள்ளது.

சந்திரசேகரன்

சந்திரசேகரன்

இதுக்குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவரான சந்திரசேகரன் கூறுகையில், 'உலகின் பல முக்கிய நிறுவனங்களுடன் டிசிஎஸ் நிறுவனம் பணியாற்றி வருகிறது, மேலும் டிசிஎஸ் பணியாளர்களின் திறனைப் பற்றி சர்வதேச நிறுவனங்களுக்கு தினந்தோறும் நிரூபித்து வருகிறோம்' என்று தெரிவித்தார்.

பணியாளர்கள்

பணியாளர்கள்

இந்த போனஸ் அறிவிப்பால் டிசிஎஸ் பணியாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். சமுக வலைதளங்களில் டிசிஎஸ் நிறுவனங்கள் பற்றிய செய்திகள்தான் அதிகளவில் பகிரப்படுகிறது.

அடபோங்கப்பா...

அடபோங்கப்பா...

இது ஒருபுறம் இருக்க, மற்ற நிறுவன பணியாளர்கள் கொடுக்கிற சம்பளத்தை ஒழுங்கா கொடுத்தாலே போதும்டா சாமி என்று புலம்புகின்றனர்.

மேலும் புதிய ஆண்டு துவங்கிய பின்பும் ஊதிய உயர்வு பற்றி வாயைத் திறக்காமல் இருக்கும் நிறுவனங்களை என்ன செய்யவது என்று தெரியாமல் திகைக்கின்றனர்.

 

சந்தை முதலீடு

சந்தை முதலீடு

இந்தியாவில் அதிக சந்தை மதிப்புடைய நிறுவனமாக டிசிஎஸ் விளங்குகிறது. மும்பை பங்குச் சந்தை அளிக்கப்பட்டுள்ள தகவலின் படி டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 494,382.94 கோடி ரூபாயாகும்.

டிசிஎஸ் நிறுவனத்துக்கு அடுத்தடுத்த நிலைகளில் ரிலையன்ஸ் (304,551.95 கோடி ரூபாய்), ஒஎன்ஜிசி (282,245.62 கோடி ரூபாய்) ஆகியவை உள்ளன.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS' one-time bonus for employees dents Q4 profit

Tata Consultancy Services, India's largest IT player, today announced a one-time bonus for all its employees to mark ten years of the company's listing on the stock exchanges.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X