ஐகேட் நிறுவனத்தை வாங்க கேப்ஜெமினி திட்டம்.. டீல் 3.6 பில்லியன் டாலர்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: ஐரோப்பியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான கேப்ஜெமினி, 3.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐகேட் நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஐகேட் நிறுவனத்தைச் சுனில் வாத்வானி மற்றும் அசோக் திரிவேதி ஆகியோர் இணைந்து 1996ஆம் ஆண்டு அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 1.27 பில்லியன்டாலராக உயர்ந்ததுள்ளது.

இன்றைய நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3.6 பில்லியன் டாலராகும். மேலும் ஐகேட் அமெரிக்கப்பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும்.

பங்கு இருப்பு

பங்கு இருப்பு

தற்போது ஐகேட் நிறுவனத்தின் 29 சதவீத பங்குகள் அபக்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்திடமும், 25 சதவீத பங்குகள் ஐகேட்நிறுவனத்தின் நிறுவனர்களான சுனில் வாத்வானி மற்றும் அசோக் திரிவேதி ஆகியோரிடம் உள்ளது.

கேப்ஜெமினி நிறுவனம் முதல் கட்டமாக இவ்விரு தரப்பினர்கள் மத்தியில் இருக்கும் 54 சதவீத பங்குகள் கைபற்றவும்,அதன் பின் மீதமுள்ள பங்குதாரர்களிடம் இருக்கும் பங்குகளைக் கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளது.

 

பாட்னி கம்பியூட்டர்ஸ்

பாட்னி கம்பியூட்டர்ஸ்

2011ஆம் ஆண்டு ஐகேட் நிறுவனம், பாட்னி கம்பியூட்டஸ் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் அபக்ஸ் பார்ட்னர்ஸ்சுமார் 1.2 பல்லியன் டாலர் கடன் அளித்தது. இக்கடன் தொகையை அடுத்தச் சில ஆண்டுகள் பங்குகளாக மாற்றிக்கொண்டதுஅபக்ஸ், இதன் மூலமாகத் தான் இந்நிறுவனம் 29 சதவீத பங்குகளைப் பெற்று நிர்வாகக் குழுவில் இடத்தைப் பிடித்தது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

சந்தையில் நிலவும் தகவல்கள் படி ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்ற பிரான்ஸ் Atos மற்றும் பிபிஒ துறையில்முன்னணியாகத் திகழும் ஜென்பாக்ட் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாகத் தெரிகிறது.

ஆனால் கேப்ஜெமினி இந்த இணைப்புப் பேச்சுவார்த்தையில் கடைசிக் கட்டம் வரை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள்கிடைத்துள்ளது.

 

ஐகேட் - கேப்ஜெமினி

ஐகேட் - கேப்ஜெமினி

இவ்விரு நிறுவனங்கள் இணைவதன் மூலம் கேப்ஜெமினி நிறுவனத்தின் வர்த்தகம் வட அமெரிக்காவில் வலிமை பெறும்,ஐகேட் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 70 சதவீதம் அமெரிக்காவில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

பணியாளர்கள்

பணியாளர்கள்

இன்றைய தேதியில் ஐகேட் நிறுவனத்தில் 33,000 பணியாளர்களும், கேப்ஜெமினி நிறுவனத்தில் 1.41 இலட்ச பணியாளர்கள்பணியாற்றி வருகின்றனர்.

போட்டி

போட்டி

இந்த இணைப்பின் மூலம் கேப்ஜெமினி, இந்திய சந்தையில் அக்சன்ச்சர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்களுக்குக் கடுமையானபோட்டி அளிக்கும்.

இணைப்புகள்

இணைப்புகள்

2008ஆம் ஆண்டு ஹெச்பி நிறுவனம் இசிஎஸ் நிறுவனத்தை 13.9 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது, அதேபோல் சிஜிஐநிறுவனம் பிரட்டனின் லாஜிகா நிறுவனத்தை 2.6 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது.

இந்த வரிசையில் ஐகேட் மற்றும் கேப்ஜெமினி நிறுவனத்தின் இணைப்புச் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Capgemini likely to acquire $3.6bn Igate, take it private

Europe's biggest IT services company Capgemini is likely to acquire Nasdaq-listed Igate. If the deal goes through, it will be one of the biggest M&As in the IT services space. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X