கல்லா டல்லடித்தாலும்.. யாவாரம் நல்லாத்தான் இருக்கு...இது தான் பேஸ்புக் கதை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: சமுக வலைத்தளத் துறையில் பில்லா அஜித் போலக் கலக்கிக் கொண்டு இருக்கும் பேஸ்புக் நிறுவனம் 2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் லாப அளவு 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

 

இந்நிறுவனத்திற்கு மொபைல் விளம்பரத்தின் மூலம் அதிக அளவிலான வருவாயக் கிடைத்தாலும், லாபத்தில் சரிவை தழுவியது பேஸ்புக் நிறுவனத்தின் சோகம்.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

சமுக வலைத்தள நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தான் மிகவும் முக்கியம். அந்த வகையில் பேஸ்புக் நிறுவனம் இக்காலாண்டில் மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்துள்ளது.

கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 13 சதவீதம் உயர்ந்து 1.44 பில்லியனாக உள்ளது. இதில் 1.25 பில்லியன் வாடிக்கையாளர்கள் மொபைலில் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.

மொத்த லாபம்

மொத்த லாபம்

2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் பங்கு சார்ந்த இழப்பீடு தொகைக்கு அதிகளவிலான தொகையை செலவு செய்தது. இதனால் பேஸ்புக்கின் மொத்த லாபம் அளவு 509 மில்லியன் டாலராக உள்ளது.

வருவாய்

வருவாய்

இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 42 சதவீதம் அதிகரித்து 3.5 பில்லியன் டாலராக உள்ளது. இதில் விளம்பர வருவாய் முக்கியப் பங்குகளை வகுக்கிறது.

டாலர் மதிப்பு மாற்றத்தால் நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

விளம்பர வருவாய்
 

விளம்பர வருவாய்

பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பர வருவாய் மட்டும் 3.32 பில்லியானாக உள்ளது. இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 46 சதவீதம் அதிகமாகும்.

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

காலாண்டு முடிவுகள் குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில்," 2015ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பான துவக்கமாக இது அமையும்" எனத் தெரிவித்தார்.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இந்நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் நிறுவன விரிவாக்கத்தில் அதிகளவிலான பணத்தை முதலீடு செய்து வருகிறது.

இதில் ஏர் டிரோன் மூலம் இண்டர்நெட், ஹலோ என்ப மொபைல் செயலி, போன்ற பல வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சியில் ஈட்டுப்பட்டு உள்ளது.

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

இந்நிறுவனம் அதிகத் தொகை கொடுத்து வாங்கிய வாட்ஸ்அப் செயலியை மாதத்திற்கு 800 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பேஸ்புக்

பேஸ்புக்

மேலும் பேஸ்புக்கில் இருக்கும் குரூப்-களில் 700 மில்லியன் வாடிக்கையாளர்களும், மெசன்ஞரில் 600 மில்லியன் வாடிக்கையாளர்களும், இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook profit down but revenues, user base grow

Facebook said on Wednesday that profit in the first quarter plunged 20 percent from a year ago but revenues got a lift from robust growth in mobile advertising.
Story first published: Thursday, April 23, 2015, 13:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X