2.83 சதவீத விற்பனை சரிவு... புதிதாக ரூ.700 கோடி முதலீடு செய்யும் வால்வோ!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கனரக மற்றும் சொகுசு பயணிகள் வாகன உற்பத்தி நிறுவனமான வால்வோ இந்தியாவில் தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தியை விரிவாக்கம் செய்ய ரூ.700 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் இந்திய கிளைகளில் அதிகளவிலான வேலைவாய்ப்பு உருவாகும்.

 

இந்நிறுவனம் இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பே கார் உற்பத்தியில் இறங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் கார்கள், சந்தையில் வெற்றிப் பெறவில்லை என்றாலும், சிறந்த தயாரிப்புகளில் முக்கிய இடத்தை வகுக்கிறது.

700 கோடி முதலீடு

700 கோடி முதலீடு

கடந்த 3-4 வருடங்களில் இந்நிறுவனத்தின் சந்தை முதலீடு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. குறிப்பாக கடந்த 10 வருடங்களில் வால்வோ 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம்.

மேலும் அடுத்த 5 வருடத்தில் 500-700 கோடி வரையிலான முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம் என வால்வோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் கமல் பாலி தெரிவித்தார்.

முக்கிய முதலீடுகள்

முக்கிய முதலீடுகள்

அடுத்த 5 வருடத்தில் வால்வோ நிர்வாகம் பஸ், டிரக், கட்டுமான உபகரனங்கள் மற்றும் நிதி சேவைகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி

கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களில் விற்பனை மந்தமாக இருந்தாலும், 2014ஆம் ஆண்டில் ஃபிரிமியம் வர்த்தக வாகனங்களில் விற்பனை 40 சதவீதம் உயர்வையும், சாதாரண வர்த்தக வாகனங்களின் விற்பனை 15-20 சதவீதம் வரையிலான உயர்வை சந்தித்துள்ளது.

2.83 சதவீத சரிவு
 

2.83 சதவீத சரிவு

2014ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 2.83 சதவீதம் குறைந்து 6,14,961 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதன் எண்ணிக்கை 6,32,851 ஆக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Volvo plans to invest up to Rs. 700 cr in India

Swedish commercial vehicles major Volvo plans to invest around Rs. 500-700 crore in India in next five years to expand business activities in the country.
Story first published: Thursday, April 23, 2015, 10:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X