இனி ராத்திரி முழுக்க ஃப்ரீ தான்.. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் புதிய சலுகை இது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்த புதுப்புது முயற்சிகளைச் செய்து வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக வருகிற மே 1ஆம் தேதி முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் லேண்ட்லைன் போன் சேவையில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலான நேரத்தில், இந்தியாவில் எந்த ஒரு லேண்ட்லைன் மற்றும் மொபைல் போன்களுக்குப் பேசினாலும் முற்றிலும் இலவசம் என்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இலவச சேவை

இலவச சேவை

இந்த இலவச சேவையை இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையில் மட்டும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் அளிக்கிறது.

யாருக்கு இந்தச் சலுகை கிடைக்கும்..

யாருக்கு இந்தச் சலுகை கிடைக்கும்..

இந்தச் சேவை இந்தியாவில் இருக்கும் அனைத்து பி.எஸ்.என்.எல் லேண்டுலைன் மற்றும் பிராண்ட்பேன்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் எனவும் பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.

புதிய வாடிக்கையாளர்

புதிய வாடிக்கையாளர்

புதிதாக இணைய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இச்சேவைப் பொருந்துமா என்பதை இந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

யாருக்கு அதிக லாபம்
 

யாருக்கு அதிக லாபம்

இரவு நேரங்களில் செயல்படும் நிறுவனங்கள், மற்றும் அதிகளவில் போன் பேசும் அனைவருக்கும் இந்தச் சலுகை லாபமாக அமையும்.

அடுத்தத் தலைமுறை இணைப்பு

அடுத்தத் தலைமுறை இணைப்பு

மேகாலயாவில் 4,000 வாடிக்கையாளர்களுக்காகப் பி.எஸ்.என்.எல் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி முதல் அடுத்தத் தலைமுறை இணைப்பைத் துவங்க உள்ளது. இதன் மூலம் அதிவிரைவு இண்டர்நெட் மற்றும் தெளிவான வாய்ஸ் கால் அப்பகுதி மக்களுக்குக் கிடைக்கும்.

வேலை நிறுத்த போராட்டம்

வேலை நிறுத்த போராட்டம்

இந்நிலையில் நிறுவனத்தை லாபக்கரமாக்க மாற்ற மத்திய அரசு உறுதியானமுடிவுகளை எடுக்கக்கோரி கடந்த செவ்வாய்க்கிழமை பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL to allow unlimited free calling at night

Bharat Sanchar Nigam Ltd. (BSNL) on Thursday said it will introduce unlimited free calling at night from its landline phones to all landline and mobile phones of all service providers across India from May 1.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X