டெல்லி: இந்தியாவில் செயல்படும் கார்பரேட் நிறுவனங்கள் 2014-15ஆம் நிதியாண்டு வரையிலான கால கட்டங்களில்மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி நிலுவையின் அளவு 4.85 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
சில மாதங்களுக்கு வரி செலுத்தாத இந்திய நிறுவனங்களின் பெயர்களை வருமான வரித்துறை நிதியமைச்சகம் பகிரங்கமாக இணையதளத்திலும், பத்திரிக்கைகளிலும் வெளியிட்டு அவர்களை அவமானப்படுத்தியது. இத்தகைய நடவடிக்கையைக் கார்பரேட் நிறுவனங்களின் மீது ஏன் மத்திய அரசு காட்டவில்லை?
நிதியமைச்சகம்
2014-15ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் கார்பரேட் நிறுவனங்கள் நேரடி மற்றும் மறைமுக வரியாகச் சுமார்4.85 லட்சம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சரான ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.
வருமான வரித்துறை, மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை ஆகியவை நிதியமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளவை.
கார்பரேட் வரி
பிப்ரவரி 28 வரையில் நேரடி வரி வதிப்பின் கீழ் கார்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேணன்டிய கார்பரேட் வரியின் மொத்தநிலுவை தொகை 3.20 லட்சம் கோடி ரூபாய் என ஜெயந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மறைமுக வரி
மறைமுக வரி விதிப்பின் கீழ் உள்ள கலால் வரி, சுங்க வரி மற்றும் சேவை வரிகளின் மூலம் காப்பரேட் நிறுவனங்களின் வரிநிலுவை 1.65 லட்ச கோடியாக உயர்ந்துள்ளது.
77 நிறுவனங்கள்
இதில் 77 நிறுவனங்களின் வரி நிலுவை மட்டும் தலா 500 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது என் சின்ஹாதெரிவித்தார்.
நிதியமைச்சகம்
வெறும் 1500 கோடி வரி நிலுவை வைத்தும் 31 இந்திய நிறுவனங்களைப் பெயர்களை வெளியிட்ட நிதியமைச்சகம்,காப்பரேட் நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுமா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.
இந்திய நிறுவனங்கள்
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications