சர்க்கரை மீதான இறக்குமதி கட்டணம் 40 சதவீதம் உயர்வு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசின் கரும்பு கொள்முதலின் நிலுவைத் தொகை அளவு 20,099 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

இத்தொகைக்கான நிதிநிலையை சரி செய்ய சர்க்கரை மீதான இறக்குமதி கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் அடுத்த 3 மாத காலகட்டத்திற்குள் சர்க்கரை விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

சமீபத்தில் கரும்பு உற்பத்தியாளர்கள், மாநில அரசு மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் மத்தியில் நடந்த பல கட்ட ஆலோசனை கூட்டத்தில் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக இத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரும்பு கொள்முதல்

கரும்பு கொள்முதல்

இத்துறையில் கரும்பு தேவையை அதிகரிக்கவும், உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்தாண்டுக்கான கரும்பு தேவையில் 10 சதவீத அளவை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய கரும்பு உற்பத்தி அமைப்பான ISMA அமைப்பு அரசை அறிவுறுத்தியுள்ளது.

நிலுவை தொகை

நிலுவை தொகை

இந்த கொள்முதல் மூலம் அடுத்த அறுவடைக் காலத்தில் கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்க முடியும் என்றும், மத்திய அரசின் 10 சதவீத தேவையை கொள்முதல் செய்வதன் மூலம் விவசாயிகளின் நிலுவை தொகையான 20,000 கோடியை கூடிய விரைவில் செலுத்தவும் இந்த அமைப்பு மத்திய அறிவுறுத்தியுள்ளது.

மோடி
 

மோடி

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் எத்தனால் பிலென்டிங் மீதான 12.6 சதவீத கலால் வரியை விலக்க மோடி தட்டமிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டில் உள்ள பல உற்பத்தி ஆலைகளை காக்கவும் ஊக்கிவிக்க முடியும் என்று இத்துறையின் கண்காணிப்பு குழு நம்புகிறது.

இறக்குமதி

இறக்குமதி

இக்கூட்டத்தில் மத்திய அரசு வரியில்லா மூல சர்க்கரை (Raw sugar) இறக்குமதியை தடுக்க சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில அளவிலான மூல சர்க்கரையை மட்டுமே உள்நாட்டு சந்தையில் விரியில்லா சட்டத்தின் இறக்குமதி செய்ய கட்டுப்பாடு வதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விலை நிலைகள்

விலை நிலைகள்

தற்போதைய சந்தை நிலவரப்படி உற்பத்தி ஆலைகளுக்கு வெளியில் 1 கிலோ சர்க்கரையின் விலை 22 -24 ரூபாயாக உள்ளது. ஆனால் இதன் உற்பத்தி விலை 30 ரூபாயாக உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா

இந்தியா

உலகிலேயே அதிகளவிலான சர்க்கரையை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளாக கணிப்புகளை விடவும் அதிகமான அளவில் இந்தியா சர்க்கரை உற்பத்தி செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sugar import duty hiked to 40 per cent

The Union Cabinet on Wednesday decided to hike the import duty on sugar to 40 per cent from the current 25 per cent to check the slide in domestic prices of the sweetener and enable the industry to clear cane arrears to the tune of Rs. 20,099 crore.
Story first published: Thursday, April 30, 2015, 11:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X