டெல்லி: தொலைத்தொடர்புத் துறை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்திற்கு 2001ஆம் ஆண்டு விலை நிலையில் மொபைல் சேவை அனுமதி வழங்கியதால் இந்நிறுவனம் 3,367.29 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது எனக் கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) குற்றம்சாட்டியுள்ளது.
2010ஆம் வருடம் நடந்த 4ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், இந்தியாவில் 4ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றையை இன்போடெல் பிராட்பேண்ட் நிறுவனம் கைபற்றி இருந்தது.
இதே 2010ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை ரிலையன்ஸ் மொத்தமாகக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
குறைவான விலை
வெறும் இண்டர்நெட் சேவை அளிக்க வேண்டிய அலைக்கற்றையில் மொபைல் சேவை (வாய்ஸ் கால் சேவை) அளிக்கத் தொலைத்தொடர்புத் துறை இந்நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதுவும் சந்தை மதிப்பிற்கும் மிகவும் குறைவான விலையில்.
உரிமம்
வாய்ஸ் கால் சேவை அளிக்க, Unified Licence பெற நுழைவு கட்டணமாக 15 கோடி ரூபாயும், நிறுவனத்தை முழு மொபைல் சேவை நிறுவனமாக மாற்றும் கட்டணமாக ( migration fee) 1,658 கோடி ரூபாயை ஆகஸ்ட் 19, 2013வது வருடம் ரிலையன்ஸ் இன்போகாம் தொலைத்தொடர்புத் துறைக்குச் செலுத்தியுள்ளது.
ரூ.3,367.29 கோடி லாபம்
தொலைத்தொடர்பு அனுமதித்த விலை நிலை 2001ஆம் ஆண்டில் மத்திய அரசால் நிறுவப்பட்டது.
இக்குறைவான கட்டணத்தில் அனுமதி பெற்றதால் ரிலையன்ஸ் நிறுவனம் 3,367.29 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளதாக CAG அமைப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிராகரிப்பு
இந்த ஆய்வறிக்கையைப் பல தரப்பு ஒப்புதலுக்குப் பின்பு தொலைத்தொடர்புத் துறையின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் சுப்ரீம் கோர்ட்டில் நிராகரித்து விட்டார்.
பொது நல வழக்கு
மேலும் இவ்வறிக்கையை ஒரு என்ஜிஓ-வின் பொது நல வழக்குத் தொடுத்ததன் மூலம் தற்போது கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆய்வுக்குப் பின் சமர்ப்பித்துள்ளது.
வாய்ஸ் சேவை
ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்திற்குத் தொலைத்தொடர்புத் துறை அக்டோபர் 21, 2013 வது வருடம் வாய்ஸ் சேவை அளிப்பதற்கான Unified Licence வழங்கியது குறிப்பிடத்தக்கத்து.
ஐஎஸ்பி உரிமம்
ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், 2010ஆம் ஆண்டில் இன்போடெல் நிறுவனத்தைக் கைப்பற்றும் போது ஐஎஸ்பி அதாவது internet service provider ஆகச் செயல்பட லைசென்ஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ்
இந்த ஐஎஸ்பி உரிமம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு Unified Licence பெறவும் அடுத்தடுத்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கு பெறவும் வாய்ப்பாக அமைந்ததாகக் கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசுக்குக் கிடைத்தது...
இந்த அனுமதியால் மத்திய அரசுக்கு 22,842 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சில ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications