பிரிக்ஸ் வங்கியின் முதல் தலைவரானார் கே.வி.காமத்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா (BRICS) ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ்வங்கியின் தலைவராக இந்திய தனியார் துறை வங்கியில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த கே.வி.காமத் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

5 நாட்டுத் தலைவர்கள் இணைந்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆதிக்கத்தைக் குறைக்க பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி என்ற புதிய வங்கியை உருவாக்கியுள்ளனர்.

நிதியமைச்சகம்

நிதியமைச்சகம்

பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் தலைவராகக் கே.வி.காமத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தற்போது அவர் ஈட்டுப்பட்டுள்ள பணிகளில் விடுப்பட்ட உடனே பிரிக்ஸ் வங்கியின் பொறுப்புகளை ஏற்க உள்ளார் எனமத்திய நிதியமைச்சக செயலாளர் ராஜீவ் தெரிவித்தார்.

 

5 நாடுகள்

5 நாடுகள்

கே.வி.காமத் அவர்களின் தேர்வு நடவடிக்கையைப் பற்றி இந்திய அரசு இக்கூட்டமைப்பில் இருக்கும் பிற நாடுகளுக்குத்தகவல் அளித்துள்ளதாகவும், ராஜீவ் தெரிவித்தார்.

கே.வி.காமத்
 

கே.வி.காமத்

இந்திய தனியார் வங்கித்துறை வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றிய காமத் கடந்த 8 வருடமாக ஆசிய வளர்ச்சிவங்கியுடன் பணியாற்றி வருகிறார். அதற்கு முன் 13 வருடமாக ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனராகப்பணியாற்றினார்.

தற்போது இவர் ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களில் செயல்படா நிர்வாக இயக்குனராகப் பணியாற்றிவருகிறார்.

 

ஐம்பதாயிரம் கோடி டாலர்

ஐம்பதாயிரம் கோடி டாலர்

பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் இந்த வங்கியை ஐம்பது பில்லியின் டாலர்கள் மூலதனத்துடன் துவக்கி வைத்துள்ளனர்.ஓவ்வொரு நாடும் 10 பில்லியன் டாலர் முதலீடு.

இத்தொகை இந்த வளரும் நாடுகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும்போது நிதியுதவி அளித்து உதவி செய்யும்.

 

முதல் தலைவராக இந்தியர்

முதல் தலைவராக இந்தியர்

இந்த வங்கியின் முதல் தலைவராக ஒரு இந்தியரை நியமிக்க இக்கூட்டமைப்பு முடிவு செய்தது. அதன் படி கடந்த 4மாதங்களாக இப்பணிகளில் நிதியமைச்சகம் செயல்பட்டு பல தேர்வுகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின் கே.வி.காமத்அவர்களை நியமனம் செய்துள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளின் வங்கி

வளர்ந்து வரும் நாடுகளின் வங்கி

பிரிக்ஸ் வங்கியின் துவக்க முயற்சி, உலக நிதி அமைப்புகளில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தைக் குறைக்கும்நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெருக்கடி நிலைகளில் வளர்ந்து வரும் நாடுகள் நிதி ஆதாரங்களைப் பெற இது உதவும்.

 

ஷாங்காய் நகரில் தலைமை அலுவலகம்

ஷாங்காய் நகரில் தலைமை அலுவலகம்

சீனாவின் ஷாங்காய் நகரம் இந்த வங்கியின் தலைமையிடமாகத் திகழும். சிறந்த கட்டமைப்பு வசதிகள், தனியார் நிதிஆதாரங்கள் பெற வாய்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் மையம் ஆகியவை ஒருசேரக் கிடைப்பதால் இந்த நகரத்தைபிரிக்ஸ் அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ்

தமிழ் குட்ரிட்டன்ஸ்

இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kamath to head BRICS bank

India has named private banker K. V. Kamath as the first head of the new development bank the BRICS group of emerging market economies is setting up.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X