ஏஓஎல் நிறுவனத்தைக் கைப்பற்றியது வெரிசோன்.. 4.4 பில்லியன் டாலர் டீல்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: அமெரிக்காவில் மீடியா மற்றும் இண்டர்நெட் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஏஓஎல் நிறுவனத்தை 4.4 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் இன்க்.

 

அமெரிக்கச் சந்தையில் கடந்த சில வருடங்களாக மொபைல் சேவையில் லாபம் குறைந்துள்ளதால், இத்துறையில் ஈட்டுப்பட்டுள்ள வெரிசோன், ஏடி&டி மற்றும் ஸ்பிரிட் கார்ப் ஆகிய நிறுவனங்கள் இண்டர்நெட் சேவையிலும், விளம்பர சேவையிலும் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி வருகிறது.

வெரிசோன் - ஏஓஎல்

வெரிசோன் - ஏஓஎல்

இதன் காரணமாக விடியோ விளம்பரத்தில் கலக்கிவரும் ஏஓஎல் நிறுவனத்தை 4.4 பில்லியன் டாலருக்கு வெரிசோன் கையகப்படுத்தியுள்ளது.

4.4 பில்லியன் டாலர்

4.4 பில்லியன் டாலர்

ஏஓஎல் நிறுவன பங்குகள் 50 டாலர் என்ற மதிப்பில் இந்நிறுவனத்தின் முழுப் பங்கு இருப்பையும் 4.4 பில்லியன் டாலருக்கு வெரிசோன் கைப்பற்றியது.

அமெரிக்கப் பங்குச்சந்தை

அமெரிக்கப் பங்குச்சந்தை

அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் துவங்கும் முன்னரே ஏஓஎல் நிறுவன பங்குகள் 18 சதவீத உயர்ந்தது. வெரிசோன் பங்குகள் 1.6 சதவீதம் சரிந்தது.

வீடியோ மார்கெட் சந்தை
 

வீடியோ மார்கெட் சந்தை

இந்தக் கையகப்படுத்துதல் மூலம் வெரிசோன் நிறுவனம் விடியோ மார்கெட் சந்தையில் கம்பீரமாகத் தனது பயணத்தைத் துவங்க உள்ளது. ஏஓஎல் நிறுவனம் விடியோ விளம்பரத்திற்காகப் பிரத்தியகமாகத் தனி மென்பொருளை வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

127 பில்லியன் டாலர் வருவாய்

127 பில்லியன் டாலர் வருவாய்

2014ஆம் ஆண்டில் வெரிசோன் 127 பில்லியன் டாலர் வருவாயும், 12 பில்லியன் டாலர் லாபம் பெற்றது.

வீடியோ சேவை

வீடியோ சேவை

நிறுவன கைப்பற்றுதலுக்குப் பின் வெரிசோன் வரும் கோடை காலத்தில் இந்நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு விடியோ சேவை அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Verizon to Buy AOL for $4.4 Billion

Verizon Communications Inc. is buying AOL Inc. in a $4.4 billion deal aimed at advancing the telecom giant’s growth ambitions in mobile video and advertising.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X