சீனவிற்குப் பறந்தார் பிரதமர் மோடி.. 20 பில்லியன் டாலர் முதலீடுகள் பெறத் திட்டம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜியாங்: நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்றிய பின்பு, முதல் முறையாக இன்று சீனா சென்றுள்ளார். அந்நாட்டின் ஜியாங்க் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்குச் சிவப்புக் கம்பளத்துடனும், பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இப்பயணத்தில் 20 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டங்களில் கையெழுத்திடப்பட உள்ளதாகவும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான வழிகளை ஆய்வு செய்யப் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒப்பந்தங்கள்
 

ஒப்பந்தங்கள்

சீனா- இந்தியா நாடுகளுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகம் மற்றும் முதலீட்டுஒப்பந்தம், உலக வர்த்தக அமைப்பு அறிவித்துள்ள திட்டங்களில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு ஒப்புந்தம்ஆகிய இரண்டையும் செயல்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

மேலும் இந்திய சந்தையில் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்யச் சீன பிரதமரான ஜி ஜின்பிங் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் மோடி திட்டமிட்டுள்ளார்.

முக்கியத் துறைகள்

முக்கியத் துறைகள்

இரு நாட்டி பிரதமர்களும் இந்தியாவில் முக்கியத் துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தைச் செய்ய உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் ரயில்வே, தொழிற்துறை தளங்கள், சுற்றுலா, விவசாயம் ஆகிய துறைகளில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

வர்த்தகப் பற்றாக்குறை

வர்த்தகப் பற்றாக்குறை

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு மிகவும் அதிகம் இதனைக் குறைக்க மத்திய அரசு பல முறை முயன்றும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இம்முறை இதற்கான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி நேரடியாக இறங்க உள்ளதாகத் தெரிகிறது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
 

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

2014-15ஆம் நிதியாண்டில் இந்தியா, சீனாவில் இருந்து 55.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இதே காலகட்டத்தில் ஏற்றுமதியின் அளவு 10.9 பில்லியன் டாலராக உள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் மத்தியில் வர்த்தகப் பற்றாக்குறை 44.9 பில்லியன் டாலராக உள்ளது. இது இந்திய பொருளாதாரத்திற்குப் பாதகம் விளைவிக்கும் காரணங்களில் ஒன்று.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை அளவின் உயர்வு, நிலை பெற்றுள்ள காரணத்தினால் தான், ரிசர்வ் வங்கி தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி கட்டணத்தைக் குறைத்து.

ஆனால் தற்போது தங்கம் மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் இறக்குமதி அளவு உயர்ந்துள்ளது தான் மத்திய அரசின் வருத்தம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Narendra Modi will push China to cut trade deficit

Prime Minister Narendra Modi is expected to pitch for concrete steps from China to check the growing trade deficit as India's neighbour has failed to act on a series of measures it promised over the past few years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more