டெல்லி: மத்திய அரசு இந்தியாவின் டவுன் மற்றும் கிராமங்களில் பிபிஓ அமைக்கும் திட்டத்தில், இறுதிக்கட்ட நிலையைஅடைந்துள்ளது.
இந்தப் பிபிஓக்களில் சுமார் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டின் சிறு நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் பிபிஓ அமைக்கும் பணியில்இறுதிக்கட்ட திட்ட வடிவமைப்பை எட்டியுள்ளது. இதன் மூலம் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கஉத்திரவிட்டுள்ளேன்." என்று அவர் தெரிவித்தார்.
தேசிய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIELIT) தலைமைச் செயலக அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்தது கொண்ட தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இவ்வாறுதெரிவித்தார்.

மேலும் வேலைவாய்ப்பு அளிப்பு வகிதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் வேறுபடும், இதற்கான திட்ட வடிவமைப்பும்செய்யப்பட்டு வருகிறது.
NIELIT நிறுவனம் வருடத்திற்கு 20 இலட்ச மாணவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தபயிற்சிகள் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications