40 வயதிற்குள் இவ்வளவு பெரிய வளர்ச்சியா?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உயர்வானதொரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவதும் மற்றும் அந்தக் கனவை உயிரோட்டத்துடன் வளர்த்து வருவதும் இயல்பு தான்.

 

இந்த வகையில் இளம் வயதிலேயே ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக மற்றும் லாபக்கரமாக நடத்துவது சாதாரண விஷயம் இல்லை. இந்நிலையில் இந்தியாவில் 40-வயதுக்குட்பட்ட சிலர் ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கி வருகின்றனர்.

இவர்களைப் பற்றித் தான் இங்குப் பார்க்கப்போகிறோம்.

மனு குமார் ஜெயின், ஜியோமி (Xiaomi)

மனு குமார் ஜெயின், ஜியோமி (Xiaomi)

இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ள ஜியோமி நிறுவனத்தின் தலைவர் தான் இந்த மனு குமார் ஜெயின் இவரது வயது வெறும் 34 தான்.

இவர் மிகவும் வித்தியாசமாகவும், தனித்தன்மையுடனும் மற்றும் பெருவாரியான மக்களை ஈர்க்கும் விதத்திலும் எதையும் செய்ய வேண்டும் என்று நினைக்கும் சாதனையாயராவார்.

புல்கிட் திரிவேதி, தலைவர் - டெக் வெர்டிக்கிள், கூகிள்

புல்கிட் திரிவேதி, தலைவர் - டெக் வெர்டிக்கிள், கூகிள்

இந்தியாவின் கல்வி முறையைத் தன்னால் மாற்ற முடியும் என்று நம்பும் இவர், இதையே தன்னுடைய வாழ்நாளின் நீண்டநாள் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்.

39 வயதில் வெற்றிகளைக் குவித்திருக்கும் இவருக்குத் தன்னம்பிக்கையின் வலிமையையும், குறிக்கோளையும் மற்றும் நேர்மையையும் கற்பித்தவர் அவருடைய தந்தையாவார்.

அம்ரிதா பாண்டே, துணைத் தலைவர் மற்றும் தலைவர் - டிஸ்னி இந்தியா
 

அம்ரிதா பாண்டே, துணைத் தலைவர் மற்றும் தலைவர் - டிஸ்னி இந்தியா

35 வயது நிரம்பியிருக்கும் அம்ரிதா பாண்டேவிற்கான குறிக்கோள்கள் இன்னமும் அமைக்கப்படவில்லை என்றே சொல்லலாம். இப்பொழுது டிஸ்னி இந்தியா நிறுவனத்தில் இருக்கும் பதவியிலேயே தான் அடைய வேண்டிய உயரம் நிறைய உள்ளது என்று கருதுகிறார் இவர்.

கௌரவ் பானர்ஜி, பொது மேலாளர் - ஸ்டார் பிளஸ்

கௌரவ் பானர்ஜி, பொது மேலாளர் - ஸ்டார் பிளஸ்

கதை சொல்ல மிகவும் பிடிக்கும் என்று சொல்லும் இவருக்கு 38 வயது தான் ஆகிறது. இவர் உலகம் முழுவதுமுள்ள மக்களுக்குப் புதுமையாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் கதை சொல்ல வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்.

2005-ம் ஆண்டில் ஸ்டார் ஆனந்தா தொடங்கப்பட்டது தான் கௌரவ் பானர்ஜிக்கு முதலில் கிடைத்த பிரேக்.

2009-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்டார் பிளஸ்-ல் சேர்ந்த திரு.பானர்ஜி 'ரிஷ்டா வாஹி சோச் நயி' தீமை உருவாக்கியதில் முக்கியமான பங்காற்றினார்.

மீனாட்சி பிரியம், மனித வள தலைவர், நோவர்டிஸ் இந்தியா

மீனாட்சி பிரியம், மனித வள தலைவர், நோவர்டிஸ் இந்தியா

36 வயது நிரம்பிய இவர் தன்னுடைய கொள்கைகளுக்காக அறியப்பட்டவராகவும் மற்றும் தனக்கான ஈர்ப்பினை அனைத்து இடங்களிலும் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடம் ஒவ்வொரு நாளும் பெற்று வருபவராகவும் உள்ளார்.

நோவர்டிஸ் இந்தியா நிறுவனத்தின மனித வள இயக்குநர் பதவியை 32 வயதில் வகித்தது தான் இவருடைய மிகப்பெரிய சாதனை.

கரன் பகத், மேலாண் இயக்குநர் மற்றும் இந்திய தலைவர், IIFL வெல்த் மேனேஜ்மெண்ட்

கரன் பகத், மேலாண் இயக்குநர் மற்றும் இந்திய தலைவர், IIFL வெல்த் மேனேஜ்மெண்ட்

36 வயதில் இருக்கும் இவர் இந்தத் தொழில் முனைவு பயணத்தைத் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பயணிக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். மேலும் கற்றுக் கொள்ளும் செயல்பாட்டை இன்னமும் தொடர்ந்து கொண்டும், புதுமையைப் பாதுகாக்கவும் செய்து வருகிறார்.

9/11 சம்பவத்தின் போது அவர் ஸ்பெயின் செல்ல முடியாமல் போகவே, இந்திய நிதி சேவை நிறுவனத்தில் அவர் சேர நேர்ந்தது, இது தான் அவருடைய வெற்றிகரமான பயணத்தின் தொடக்கமாகும்.

சிக்கி சர்க்கார், பதிப்பாளர், பென்குயின் இந்தியா

சிக்கி சர்க்கார், பதிப்பாளர், பென்குயின் இந்தியா

புத்தகங்களைத் தன்னுடைய இன்ஸ்பிரேஷனாகக் கொண்டிருக்கும் இவர், தன்னுடைய தொழிலையும் புத்தகங்களைக் கொண்டே அமைத்துக் கொண்டார்.

37 வயதில் பென்குயின் இந்தியாவின் ஒரு பதிப்பாளராக இருக்கும் இவருக்கும் ஒரு வாழ்நாள் குறிக்கோள் உண்டு. அது மாபெரும் புத்தகங்களைப் பதிப்பிக்க வேண்டும் மற்றும் அவற்றை உலகம் முழுவதும் விற்க வேண்டும்.

1985-ம் ஆண்டு இங்கிலாந்தின் பியர்ஸன் குழுமத்துடன் சேர்ந்து பென்குயின் இந்தியா நிறுவனத்தைத் தொடங்கிய அவீக் சர்க்காரின் மகள் தான் சிக்கி சார்க்கார் ஆவார். இவர் ஆனந்த பஜார் பத்ரிகாவின் முதன்மை ஆசியராவார்.

நிகில் ஷா, மேலாண் இயக்குநர், அல்வாரெஸ் & மார்ஷல்

நிகில் ஷா, மேலாண் இயக்குநர், அல்வாரெஸ் & மார்ஷல்

36 வயதே நிரம்பிய இவர் மாபெரும் குறிக்கோள்களையும் மற்றும் ஞானத்தையும் பெற்றுள்ளார். அல்வாரெஸ் மற்றும் மார்ஷல் குழுமத்தின் மேலாண் இயக்குநராக இருக்கும் இவர், வெற்றியையும் மற்றும் வளர்ச்சியையும் நோக்கி முன்னேறி வருகிறார்.

குன்ஜன் ஷா, பார்ட்னர்-அமர்சந்த் மங்கள்தாஸ்

குன்ஜன் ஷா, பார்ட்னர்-அமர்சந்த் மங்கள்தாஸ்

சட்டக் கல்லூரி படிப்புக்குப் பின்னர்க் குன்ஜன் பெற்ற பிரேக் தான் அவருடைய இன்றைய நிலைக்குக் காரணமாகும்.

இவருக்கு அமர்சந்த் மங்கள்தாஸில் வேலை கொடுக்கப்பட்டது. 39 வயதில் தன்னுடைய தொழிலில் உயர்ந்த இத்திற்குச் சென்ற இவர், நிறுவன சட்டப் பிரிவை வெற்றிகரமாகச் செயல்படுத்துபவராகப் பெயரெடுத்திருக்கிறார். இவர் சட்டத்தின் வளர்ச்சிக்காக மற்றும் இந்தியாவின் கொள்கை வளர்ச்சியில் பங்கெடுக்கவும் விரும்புகிறார்.

இன்னும் பல

இன்னும் பல

இந்தியாவில் 40 வயதுக் உட்பட்ட பலர் சாதித்து இருந்தாலும், பிஸ்னஸ் டூடே சில வரைமுறைகளுடன் இந்த 10 பேரை தேர்ந்தெடுத்துள்ளது.

உஷார் மக்களே.. உஷார்..!

உஷார் மக்களே.. உஷார்..!

குவிக்கர், ஓஎல்எக்ஸ் தளங்களில் மோசடி.. உஷார்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

It's Youth Era: 10 Business Tycoons Under 40 Making a Mark

Achieving great heights in life is a something people crave for and for some this dream comes alive early enough to let them shine on top. Let us have a look at some of the top executives of India that are yet to turn 40.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X