ரிலையன்ஸ் ரீடைல் நிறுவன வர்த்தகத்தை மேம்படுத்த ரூ.4,500 கோடி கடன்: முகேஷ் அம்பானி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் ஒன்றான, ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் இந்நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி வங்கிக் கடன் மற்றும் பத்திர விற்பனையின் மூலம் 4,500 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

 

சில்லறை வர்த்தகத்தில் பியூச்சர் குருப் மற்றும் பார்தி ரீடைல் ஆகிய நிறுவனங்கள் இணைந்ததை அடுத்து ரிலையன்ஸ் ரிடைல் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் புதிய திட்டங்களைத் தீட்டியுள்ளது. இத்திட்டங்களைச் செயல்படுத்தவே முகேஷ் அம்பானி தலைமையிலான இந்நிறுவனம் 4,500 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

4,500 கோடி ரூபாய்

4,500 கோடி ரூபாய்

முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் இருந்து 2,500 கோடி ரூபாயும், கடன் பத்திரங்கள் விற்பனையின் மூலம் 2,000கோடி ரூபாயும் நிதி திரட்டியுள்ளது.

நல்ல வளர்ச்சியில் தான் உள்ளது..

நல்ல வளர்ச்சியில் தான் உள்ளது..

சில மாதங்களுக்கு முன் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் மிகவும் குறைவான வர்த்தகம் மற்றும் லாபத்தைப் பெற்று வருவதாகக் கருத்து நிலவியது.

ஆனால் தற்போது வேகமான வளர்ச்சி மற்றும் லாபகரமான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாக இந்நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

17,000 கோடி ரூபாய் வருவாய்
 

17,000 கோடி ரூபாய் வருவாய்

2014ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மொத்த வருவாய் 17,000 கோடி ரூபாயாக இருந்தது. மேலும் இக்காலகட்டத்தில் வரிக்கு பிந்தைய லாபமாக 193 கோடி ரூபாயாக உள்ளது.

ஈஷா மற்றும் ஆகாஷ்

ஈஷா மற்றும் ஆகாஷ்

கடந்த அக்டோபர் மாதம் முகேஷ் அம்பானியின் இரட்டை குழந்தைகளான ஈஷா மற்றும் ஆகாஷ் ஆகியோர் ரிலையன் குழுமத்தின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் ஆகிய பிரிவுகளின் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

ஆதித்தியா பிர்லா குழுமம்

ஆதித்தியா பிர்லா குழுமம்

பியுச்சர் குரூப், ரிலையன்ஸ் ரிலைட் மட்டும் அல்லாமல் ஆதித்தியா பிர்லா குழுமம் மற்றும் கோத்ரேஜ் ஆகிய நிறுவனங்களுக்கு இச்சந்தையில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் திட்டமிட்டுள்ளது.

இதனால் இந்திய சந்தையில் போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈகாமர்ஸ் சந்தை

ஈகாமர்ஸ் சந்தை

மேலும் 2019ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஈகாமர்ஸ் சந்தை 4 மடங்கு உயர்ந்து மொத்த சந்தையின் மதிப்பு 70 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைப் பெறவே நான்கு நிறுவனங்களுக்கும் போட்டிப்போட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Retail to borrow Rs 4,500 crore for e-commerce boost

Reliance Retail plans to borrow Rs 4,500 crore through term loans and debentures to build its ecommerce business and accelerate store openings in select formats as rivals intensify their efforts to expand market share. 
Story first published: Monday, May 25, 2015, 11:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X