இந்திய மொபைல் துறையில் முதலீடு செய்ய கார்லோஸ் ஸ்லிம் ஆர்வம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகிலேயே 2வது பணக்காரரான கார்லோஸ் ஸ்லிம், தனது அடுத்த மிகப்பெரிய வர்த்தகத்தை இந்திய தொலைத்தொடர்பு துறையைக் குறிவைத்துத் திட்டமிட்டுள்ளார்.

 

கார்லோஸின் டெலிகாம் நிறுவனமான அமெரிக்கா மோவில் மெக்சிகோவில் சில சிக்கல்களைச் சந்தித்து வருவதால், இந்நிலையைச் சமாளிக்கவும், புதிய சந்தையில் இறங்கவும் திட்டமிட்டு இந்திய சந்தையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

வீடியோகான் நிறுவனம்

வீடியோகான் நிறுவனம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்திய வந்த கார்லோஸ் தனது திட்டத்தைச் செயல்படுத்துதற்காக வீடியோகான் நிறுவனத்தின் தலைவரான வேனுகோபால் தூத் அவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.

அது மட்டும் அல்லாமல் பிற முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்களைச் சந்தித்தார்.

கார்லோஸ் ஸ்லிம்

கார்லோஸ் ஸ்லிம்

75 வயதான கார்லோஸ் ஸ்லிம் தலைமை வகிக்கும் அமெரிக்கா மோவில் நிறுவனத்தின் மூலம் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதலீடு செய்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க மோவில் - வீடியோகான்
 

அமெரிக்க மோவில் - வீடியோகான்

இதுகுறித்து அமெரிக்க மோவில் நிறுவனம் எந்த விதமான பதில்களையும் அளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஆனால் வீடியோகான நிறுவனம்," அமெரிக்க மோவில் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வர்த்தகத்தைத் துவக்கவும், விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்." எனத் தெரிவித்துள்ளது.

முதலீடு

முதலீடு

தற்போதைய நிலையில் கார்லோஸ் தலைமையிலான அமெரிக்க மோவில் நிறுவனம் வீடியோகான் நிறுவனம் இல்லை என்றாலும், எதாவது ஒரு இந்திய நிறுவனத்தில் கண்டிப்பாகப் பல பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்வது உறுதியாகியுள்ளது.

பல துறைகள்

பல துறைகள்

கார்லோஸ் ஸ்லிம் தொலைத்தொடர்பு மட்டும் அல்லாமல், கல்வி, சுகாதாரம், உற்பத்தி, உணவு மற்றும் குளிர்பானங்கள், ரியல் எஸ்டேட், ஏர்லைன்ஸ், மீடியா, சுரங்கம், எண்ணெய், ஹாஸ்பிடாலிட்டி, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், ரீடைல், விளையாட்டு மற்றும் நிதிச் சேவை ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறார்.

77.1 பில்லியன் டாலர்

77.1 பில்லியன் டாலர்

மேலும் கார்லோஸ் ஸ்லிம் அவர்களின் சொத்து மதிப்பு 77.1 பில்லியன் டாலராகும், இவர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ்-க்கு அடுத்தப்பிடியாக உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World's second richest man Carlos Slim eyes Indian telecom

Carlos Slim, the world's richest man after Bill Gates, could be eyeing India as his next big business entry at a time his telecom firm faces stiff challenges in Mexico, its home market and also its biggest.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X