இனி இணைய தளத்திலேயே கடனுக்கான ஒப்புதல் அளிக்கப்படும்: எஸ்பிஐ

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி, அருந்ததி பட்டாச்சார்யா தலைமையில் தொழில்நுட்ப துணையோடும் பல புதிய பரிமாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இவ்வங்கி வெளியிட்ட அறிவிப்பில் இனி கடன் ஒப்புதல் அனைத்தும் இணையம் வாயிலாகவே அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

கடன்

கடன்

இனி வரும் நாட்களில் வீட்டுக்கடன், கார் லோன், கல்வி கடன் மற்றும் பர்சனல் லோன் ஆகியவை எஸ்பிஐ வங்கி புதிதாக நிறுவியுள்ள ஆன்லைன் கஸ்டமர் அக்வசிஷன் சொல்யூஷன் மூலம் இணையதள மூலமாகவே ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

இவ்வங்கி நிறுவியுள்ளத டெக்னாலஜி வாயிலாக விண்ணப்பதாரரின் தகுதி மற்றும் தகவல்கள் அனைத்தும் இண்டர்நெட் வாயிலாவே சோதனை செய்யப்படும்.

இச்சோதனைக்குப்பின் வங்கி அதிகாரி விண்ணப்பதாரரை தொடர்புகொண்டு பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

அப்லோடு

அப்லோடு

மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்களை இணையம் மூலமாகவே அப்லோடு செய்யப்படும் வசதி உடையது. இதன் மூலம் கடன் ஒப்புதலுக்கான காலஅவகாசம் குறையும்.

அதுமட்டும் அல்லாமல் கூடிய விரைவில் இச்சேவையை மொபைல் தளத்திலும் அறிமுகப்படுத்த எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது.

தனியார் வங்கி
 

தனியார் வங்கி

இதன் மூலம் எஸ்பிஐ வங்கி தனியார் வங்கிகளுக்கு இணையாகச் செயல்பட முடியும், அதுமட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான சேவையும் நம்பிக்கையும் கிடைக்க இத்தகைய தொழில்நுட்பம் பயன்படும்.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தில் எஸ்பிஐ பங்குகள் 0.36 சதவீதம் உயர்ந்து 278.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI loan approval now goes online

Government-owned lender State Bank of India launched Online Customer Acquisition Solution (OCAS), an online platform to apply for home loans, car loans, education loans and personal loans.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X