உலகத் தரத்திற்கு உயர்ந்த மைக்ரோமேக்ஸ்.. டாப் 10 பட்டியலில் இடம் கிடைத்தது!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை சந்தையல் உலகளவில் டாப் 10 இடங்களில் இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் இடம்பெற்றுள்ளது.

 

இன்றைய வாழ்க்கை முறையில் செல்போன் இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது. இத்தகைய நிலையில் பல வருடமாக வெளிநாடகளில் இருந்து மட்டுமே மொபைல்களை இறக்குமதி செய்து வந்த இந்தியா, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மூலம் சொந்த தயாரிப்பை விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.

1.8% சந்தை மதிப்பு

1.8% சந்தை மதிப்பு

ஜனவரி - மார்ச் மாத காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்து 1.8 சதவீத சந்தையைக் கைப்பற்றிக் டாப் 10 இடங்களில் இடம்பிடித்துள்ளதாகச் சந்தை ஆய்வு நிறுவனமான கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விற்பனையில் உயர்வு..

விற்பனையில் உயர்வு..

இந்நிறுவனத்தின் ஆய்வின் படி மைக்ரோமேக்ஸ் விற்பனை ஜனவரி - மார்ச் மாத காலத்தில் 2.5 சதவீதம் உயர்ந்து 460.3 மில்லியன் மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளது.

சாம்சங் மற்றும் ஆப்பிள்

சாம்சங் மற்றும் ஆப்பிள்

இந்நிலையில் சாம்சங் 21.3%, ஆப்பிள் 13.1%, மைக்ரோசாப்ட் 7.2%, எல்ஜி 4.3%, லெநோவோ 4.2%, ஹூவே 4%, ஜியோமி 3.2% அளவில் விற்பனை சந்தையைப் பெற்றது. இப்பட்டியலில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 1.8% சந்தை மதிப்புடன் 10வது இடத்தைப் பெற்றது.

இந்தியா மற்றும் சீனா நிறுவனங்கள்
 

இந்தியா மற்றும் சீனா நிறுவனங்கள்

வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்திய மற்றும் சீன நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

இந்த 3 மாத காலகட்டத்தில் மட்டும் சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை 19.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இத்துறைச் சந்தைக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை என்றே கூறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Micromax among world's top 10 mobile phone sellers

Homegrown handset maker Micromax ranks among the top 10 global handset vendors with 1.8% market share during the January-March quarter, according to research firm Gartner.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X